tamilnadu

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் சிபிஐ அறிக்கை தாக்கல் - பிப்.6-ல் தீர்ப்பு தேதி அறிவிக்க வாய்ப்பு

கோவை, ஜன.23–  பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் கொடூரம் தொடர்பாக நீதி மன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதனையடுத்து இறுதி வாதம் பிப்ரவரி 6 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமே தீர்ப்பின் தேதி அறிவிக்கப் படும் என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கிறது. பொள்ளாச்சியில் இளம்பெண் களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அதனை வீடியோவாக பதிவு செய்து பணம் பறித்து வந்த கும் பலைச் சேர்ந்தோர் அண்மையில் கைது செய்யப்பட்டனர். இதன்பின் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. குறிப்பாக, இக்கும்பல் நூற்றுக்கும் மேற்பட்ட இளம்பெண்களை பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கியது தெரிய வந்தது. இந்த கொடூர சம்பவமானது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை யும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.  இந்த சம்பவம் தொடர்பாக முத லில் கோவை மாவட்ட காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆனால், இதன் அடுத்தடுத்த விசார ணையில் ஆளும்கட்சியின் முக்கிய பிரமுகர்களுக்கு இக்கும்பலுடன் தொடர்பிருப்பதாக தகவல்கள் வெளி யாகின. இதனால் சிபிஐ விசார ணைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் வலியுறுத்தினர். இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, பின்னர் சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து தீவிர விசா ரணை மேற்கொண்டு வந்த சிபிஐ, பல் வேறு ஆதாரங்களை திரட்டி வருகின் றனர். இதில் ஒன்றாக பொள்ளாச்சி யில் பெண்களை பாலியல் வன் கொடுமை செய்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக புகார் அளித்த பெண்ணின் சகோதரர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த அடிதடி வழக்கையும் சிபிஐ விசாரித்து வந்தது. இந்த நிலையில், அடிதடி வழக்கில் போதிய ஆதாரம் இல்லாத தால் மேல் நடவடிக்கையை கைவிடுவ தாக சிபிஐ கோவை தலைமை குற்றவி யல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை வரும் பிப்ரவரி 6ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், அன்றைய தினம் இறுதி வாதம் நடைபெற்று தீர்ப்பு தேதி அறி விக்க வாய்ப்புள்ளதாக நீதிமன்ற வட் டாரங்களில் கூறப்படுகிறது.

;