குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதி செய்துதர கோரிக்கை
மலைவாழ் மக்கள் சங்கம் மனு
பொள்ளாச்சி,பிப்.4- குடிநீர் மற்றும் கழிப்பிடவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தரக்கோரி, திங்களன்று கோட்டூர் பேரூராட்சி செயல் அலுவலரிடம் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் மனு அளித்தனர். இதுகுறித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் வி.எஸ்.பரமசிவம் அளித்த மனுவில் கூறுகையில்,கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் பேரூராட்சிக் குட்டபட்ட பகுதிகளான, புளியங்கண்டி மற்றும் ஆழியார் அன்புநகர் வாய்க்கால் மேடு, நெல்லித்துறை மன்னம் உள்ளிட்ட மலைவாழ் மக்கள் வசிக் கின்ற மலைகிராமங்கள் அமைந்துள்ளது. இப்பகுதிகளில் 200 க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும்பங்கள் பல ஆண்டுகளாக கழிப்பிடவசதி மற்றும் சுகா தாரமான குடிநீர், முறையான மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி வசித்து வருகின்றனர்.குறிப் பாக கோட்டூர் பேரூராட்சிக்கு உட்பட்ட இப்பகுதியில் பல ஆண்டுகளாக எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்ப டவில்லை. கடந்த காலங்களில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற போராட்டங்களின் போது அடிப்படை வசதிகளை செய்துதருவதாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தனி வட்டாட்சியர் உறுதியளித்தார். ஆனால் இதுவரை எந்தவொரு அடிப்படை வசதிகளை செய்துதரப்படவில்லை. எனவே, இப்பழங்குடியின மக்களுக்கு குடிநீர் குழாய் களை கூடுதலாக பொருத்தி தர வேண்டும், பொதுச் சுகாதாரம் பாதுகாத்திட கழிப்பிட வசதிகளை உருவாக்கித் தரவேண்டும். சோலார் மின் விளக்குகளை தர வேண்டும்.என்பன வலியுறுத்தியுள்ளனர். முன்னதாக, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் ஆனை மலை ஒன்றிய தலைவர் ஏ.அம்மாவாசை, ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர்.தங்கவேல், சமூக நல ஆர்வலர் பவுலினா சிவசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
போலி நெய் - அதிகாரிகள் பறிமுதல்
கோவை, பிப்.4- கோவை குனியமுத்தூர் அருகே உணவு பாதுகாப்பு அதி காரிகள் அதிரடி சோதனையில் ரூ. 30 ஆயிரம் மதிப்பி ளான 100 கிலோ போலி நெய்யை பறிமுதல் செய்தனர். கோவை குனியமுத்தூர் வெத்தலக்கார வீதி , அன்னம்மா நாயக்கம் சந்து, மாரியம்மன் கோவில் வீதி ஆகிய பகுதிக ளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோத னையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த சில கடைக ளில் பாமாயில், டால்டாவை கொண்டு போலியாக நெய் தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் போலி நெய்களை சந்தை போன்ற இடங்களில் சென்று விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலி நெய்யை தயாரித்த அம்சா , ராஜேஷ்வரி, ராஜா மணி, கலா, முனிஸ்கா, அழகுபாண்டி, ராஜேஷ்வரி, முத்து ரகு ஆகியோரை கைது செய்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அங்கிருந்த போலி நெய்களை பறிமுதல் செய்துள்ளனர்.