tamilnadu

நாளை போலியோ சொட்டு மருத்துவ முகாம்

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்க ஏற்பாடு

சேலம், ஜன.17-  சேலம் மாவட்டத்தில் 5 வயதிற் குட்பட்ட அனைத்து குழந்தை களுக்கும் தவறாமல் போலியோ சொட்டு மருந்து கட்டாயம் போட்டு  கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன்  அறிவுறுத்தி உள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்  கூறியதாவது, போலியோ எனப் படும் இளம்பிள்ளை வாத நோயை அறவே ஒழிக்க வேண்டும் என்ற  உயரிய நோக்கத்தோடு நாடு முழு வதும் பிறந்த குழந்தை முதல் 5  வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் (ஜன.19) ஞாயிறன்று நடைபெறுகிறது. சேலம் மாவட் டத்தில் 3 லட்சத்து 70 ஆயிரம்  குழந்தைகளுக்கு ஒரே சுற்றில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. சேலம் மாவட்டத்தில் 2,270 மையங்களில் காலை 7 மணி முதல்  மாலை 5 மணி வரை 5 வயதிற் குட்பட்ட அனைத்து குழந்தை களுக்கும் வழங்கப்படும். ஏற் கனவே போலியோ சொட்டு மருந்து  கொடுத்திருந்தாலும் மீண்டும் கூடுதல் தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்கலாம். இதனை அனைத்து அரசு மருத்துவ மனைகள், ஆரம்ப சுகாதார நிலை யங்கள்,  துணை சுகாதார நிலை யங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிக்கூடங்கள், பஞ்சாயத்து அலுவலகங்கள், தனியார் மருத்துவ மனைகளிலும் மற்றும் நடமாடும் சொட்டு மருந்து முகாம்களில் வழங்கப்பட உள்ளது.  மேலும், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், சுங்கச் சாவடிகள், திரையரங்குகள், சந்தைகள், வணிக வளாகங்கள் மற்றும் விழா நடைபெறும் இடங் களில் 77 போக்குவரத்து முகாம்கள்  வாயிலாக போலியோ சொட்டு  மருந்து இலவசமாக வழங்கப்பட வுள்ளது. போலியோ சொட்டு மருந்து கொடுப் பதன் மூலம் குழந்தைகளை போலி யோ நோயிலிருந்து பாதுகாப்ப துடன், வருங்காலத்தில் போலியோ நோய் இல்லாத இந்தியாவை உரு வாக்க ஒத்துழைப்பு நல்கவேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். 

கோவை

இதேபோல், கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி  வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்  தெரிவித்துள்ளதாவது, கேவை   மாவட்டம் முழுவதும் உள்ள  கிராம புறங்களில் 1202 மையங்களும்,  நகர்புறங்களில் 379 மையங்களும் என மொத்தம் 1581 போலியோ சொட்டு மருந்து மையங்கள் அமைக் கப்பட்டுள்ளன. மேலும் பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான  நிலையம், கோவில்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் மையங்கள் அமைக் கப்பட்டுள்ளது.  இப்போலியோ சொட்டு மருந்து வழங்கும் மையங்களில் பொது சுகாதாரத்துறை, அங்கன்வாடி பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட 6536 பணியாளர்கள் பணியாற்ற வுள்ளனர். எனவே 5 வயதிற்குட் பட்ட அனைத்து குழந்தைகளின்  பெற்றோர்கள் தங்களது குழந்தை களுக்கு முகாம் நாளன்று தவறா மல் போலியோ சொட்டு மருந்து  அளிக்க கேட்டுகொள்ளப்படு கிறது. இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

;