tamilnadu

பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அரசு அதிகாரிகள் அளித்த புகாரை ஏற்க மறுத்த காவல்துறை

கோவை, ஆக.3- கோவை சூலூர் அருகே பள்ளி  குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்கள் குறித்து அரசு அலுவலர்கள் புகார் கொடுத்த நிலையில், அதுகுறித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவது அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.  கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள பீடம் பள்ளி பகுதி யில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி யில் மாவட்ட குழந்தைகள் பாது காப்புத் துறையின் சார்பில் குட் டச், பேட் டச் குறித்த பாலியல் விழிப் புணர்வு தொடர்பான சிறப்பு வகுப்பு வெள்ளியன்று மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தீபா  தலைமையில் நடைபெற்றுள் ளது. அப்போது, 20க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் அலுவலரிடம் தனியாக பேச வேண்டும் என்று கூறியுள்ளனர். இதன்பின் அம்மா ணவிகளிடம் குழந்தைகள் பாது காப்பு அலுவலர்கள் விசாரிக்கை யில், தாங்கள் பள்ளி செல்லும் போதும், வரும் போதும், இயற்கை உபாதைகளுக்கு செல்லும்போதும் நடுப்பாளையம் ஊரைச் சேர்ந்த மூன்று பேர் தங்களது ஆடைகளை களைந்து கொண்டு நின்று பாலியல் ரீதியாக தொடர்ந்து தொந்தரவு செய்து வருவதாக அந்த அலுவலர் களிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதனை கேட்ட அதிகாரிகள் அதிர்ச் சியடைந்தனர். இதனைத்தொடர்ந்து பெண் குழந்தைகள்  பாதுகாப்பு நல அலு வலர் தீபா மற்றும் பீடம்பள்ளி  கிராம நிர்வாக அலுவலர் லோகநாயகி ஆகியோர் சூலூர் காவல் நிலையத் தில் புகார் அளித்தனர்.

அந்த புகா ரின் பேரில் மாணவிகள் கூறிய நபர்களில் ஒருவரான வெங்கடாச லம் என்பவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்த நிலை யில் மேலும் 2 பேர் தலைமறை வாகிவிட்டனர் . இந்நிலையில் அரசு அதிகாரி கள் கொடுத்த புகாரை ஏற்றுக் கொள்ள காவல்துறையினர் மறுத் துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்  குழந்தைகளில் யாரேனும் ஒருவர் அல்லது அவர்களது பெற்றோரோ வந்து புகார் அளித்தால் மட்டுமே குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்ய முடியும் என தெரிவித்துள் ளனர். அரசு அதிகாரிகள் கொடுத்த புகார் மீது இதுவரை ஏற்றுக் கொள்ளாமல் எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. காவல்துறை யினரின் தயக்கம் பலத்த சந்தே கத்தை ஏற்படுத்தியுள்ளது.  இதுகுறித்து அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பாதிக் கப்பட்ட குழந்தைகள் பாலியல் குறித்த விழிப்புணர்வு வகுப்பு எடுக்க வந்த அதிகாரிகளிடம் தங்க ளுக்கு நேர்ந்த தொல்லை குறித்து தெரிவித்துள்ளனர். இதனைகேட்ட அதிகாரிகள் நேரிடையாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள னர். ஆனால் இதனை காவல்துறை யினர் ஏற்க மறுப்பது சந்தேகத்தை  ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற  சம்பவங்களில் பாதிப்புக்குள்ளான வர்களை சீருடை அணிந்த காவலர் கள் விசாரிக்கக் கூடாது, காவல் நிலையத்திற்கு வரவழைக்கக் கூடாது என்பது போன்ற வழிகாட்டு தல் உள்ள நிலையில் காவல்துறை யினர் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க வரவேண்டும் என்று சொல்வது எந்த வகையில் நியா யம். எந்தப் பெற்றோராவது, எந்த  மாணவியாவது, பெண் குழந்தை யாவது  நேரடியாக சென்று நடந்த சம்பவங்களை காவல் நிலையத் தில் புகார் தர முடியுமா, அவ்வாறு புகார் தரும் பெண்ணின் எதிர்கா லத்தை சற்று யோசித்துப் பார்க்க வேண்டும் என்றனர்.  இத்தனை நாட்களாக நடை பெற்ற தொல்லைகளை வெளிப்ப டுத்த முடியாத நிலையில் அதிகாரி கள், ஆசிரியர்களிடம் குழந்தைகள் தெரிவித்துள்ளதே துணிச்சலான நடவடிக்கையாகும். இந்நிலையில் காவல்துறையினர் புகாரை ஏற்க  மறுப்பது அதிர்ச்சியை ஏற்படுத்து கிறது. அரசு ஊழியரின் சாட்சியத் துடன் அளிக்கும் புகாரை காலதா மதப்படுத்தக்கூடாது. அதிகாரி கள் அளிக்கும் புகாரை ஏற்று உட னடியாக வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று அப்பகுதியினர் தெரிவித்தனர்.

;