tamilnadu

img

இயற்கை வழி பொருளகத்தின் மீதான மக்களின் வரவேற்பு அங்கக சான்றை பெற விவசாயிகள் ஆர்வம்

கோவை, மே 31 –பூச்சி மருந்து, உரம் போன்றவற்றை பயன்படுத்தாத இயற்கைவழி பொருளகத்திற்கு நுகர்வோர்மத்தியில் வரவேற்பு அதிகரிப்பால்இயற்கை விவசாயம் மேற்கொள்ள அங்ககச் சான்றிதல் பெறுவதற்கு விவசாயிகள் பெரும் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.கோவையை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாடு அங்ககச் சான்றளிப்புத் துறை  செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் தேசியஅங்கக வேளாண்மை செயல்திட்டத்தின் படி, அபீடா நிறுவனத்தின் வழிகாட்டுதல் மற்றும் அங்கீகாரத்தின் படி இயற்கை முறையில் வேளாண் பயிர் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு அங்ககச்சான்று இத்துறையில் வழங்கப்படுகிறது. இந்தாச்சான்று பெறும் விவசாயிகள் தங்களது பொருட்களை தாங்களே இயற்கை வேளாண் பொருட்கள் என விற்பனை செய்துக்கொள்ளலாம்.மேலும், இதர மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி வாய்ப்பும் விவசாயிகளுக்குகிடைப்பதாக அங்ககச்சான்றளிப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமீப காலமாக பொதுமக்கள் மத்தியில் உரம், பூச்சி மருந்து உள்ளிட்டவைகளை பயன்படுத்தாமல் இயற்கை வழியான விவசாய பொருட்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.இதனால் கடந்த சில ஆண்டுகளாகவே அங்ககச்சான்று வாங்குவதற்கு விவசாயிகள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. அதன்படி கடந்த ஆண்டு மட்டும் 31 ஆயிரத்து 686 ஏக்கருக்கு 4 ஆயிரத்து 768 விவசாயிகள் சான்று பெற்றுள்ளனர். முந்தைய ஆண்டைக் காட்டிலும் 1,429 விவசாயிகள் கூடுதலாக அங்ககச்சான்று பெற்றுள்ளதாக சான்றிளிப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வேளாண்உதவி இயக்குனர் (அங்ககச் சான்றளிப்பு) ஐரின் பிரியதர்ஷினி கூறியதாவது: அங்ககச் சான்றினை பெறுவதற்கு விவசாயிகள் குறைந்தப்பட்சம் மூன்று ஆண்டுகள்இயற்கை வேளாண்மை செய்திருக்க வேண்டும். போர்வெல் மற்றும் கிணற்று பாசனமாக இருத்தல் வேண்டும். இயற்கை ரங்கள்மட்டுமே பயன்படுத்த வேண்டும். இடுபொருட்கள் வெளியில் இருந்து பெறக்கூடாது. கால்நடைகள் மற்றும் பயிர்களின் கழிவுகளை மட்டுமே உரமாக பயன்படுத்த வேண்டும். மாதம்தோறும் பயிர்களுக்கு வைக்கப்படும் உரங்கள், உரங்களின் அளவு, நீர் பாய்ச்சுதல் உள்ளிட்டவை குறித்து நோட்டுப்போட்டு பராமரிக்கவேண்டும். நுண்ணுயிர் உரங்கள் பயன்படுத்த வேண்டும் என்றால் சான்றளிப்புத் துறை அதிகரிகளின் அறிவுறுத்தல் படியே மேற்கொள்ள வேண்டும்.அங்ககச்சான்று பெறுவதற்கு கோவையில் உள்ள விதைத்சான்று மற்றும் அங்ககச் சான்றுஇயக்குனரகத்துக்கு அஞ்சல் மற்றும் இணையதளம் வழியாகவிண்ணப்பிக்க வேண்டும்.அங்ககச்சான்று வழங்குதற்கு கோவை, திருச்சி, மதுரை மற்றும்வேலூர் என நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகளின் விண்ணப்பங்கள்அந்தந்த மண்டலத்துக்கு உட்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பிவைக்கப்படும். அங்ககச் சான்றுஆய்வாளர்கள் நேரடியாக தோட்டங்களில் ஆய்வு மேற்கொள்வார்கள். இதில் மண்ணின் தன்மை, நீர்வளம், உயிர்வேலி, உரங்கள்பயன்பாடு, பரமரிப்பு புத்தகம்,விளைபொருட்களில் ரசாயனத் தன்னை உள்ளதா என  முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்படும். அதன்பின்பே விவசாயிகளுக்கு அங்ககச்சான்று அளிக்கப்படும். விவசாயிகள் விண்ணப்பப் படிவத்துடன் பண்ணையின் விபரங்கள், வரைபடம், மண் மற்றும் நீர்பரிசோதனை அறிக்கை, ஆண்டு பயிர் சாகுபடி திட்டம், சிட்டா தகல், ஆதார் அட்டை நகல் புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். தனிநபர் விவசாயிகள், பண்ணைக் குழுக்கள் மற்றும் வணிக நிறுவனங்களும் இச்சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். இதற்குபதிவு கட்டணம், ஆய்வு மற்றும் சான்று கட்டணம், வாய்ப்புச்சான்று கட்டணம், சான்று கட்டணம் பெறப்படுகிறது. சிறு, குறுவிவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரத்து 700, பிற விவசாயிகளுக்கு ரூ.3 ஆயிரத்து 200, பண்ணைக்குழுக்களுக்கு ரூ.7 ஆயிரத்து 200மற்றும் வணிக நிறுவணங்கள்9 ஆயிரத்து 400 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். இயற்கை வேளாண் விளைபொருட்களுக்கு நுகர்வோர்கள்மத்தியில் ஆர்வம் அதிகரித்திருப்பதால் அங்ககச்சான்று பெறும்விவசாயிகளின் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது இவ்வாறு அவர் தெரிவித்தார்.