தருமபுரி, நவ. 25- இலவச மனைப்பட்டா கேட்டு காணிகர அள்ளி கிராமத்தை சேர்ந்த அருந்ததிய மக்கள் மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழியிடம் மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டத்திற்கு உட்பட்ட காணிகர அள்ளி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அருந்ததிய குடியிருப்புகள் உள்ளன இவர்களில் பெரும்பாலானோர் விவசாய கூலி தொழிலாளர்களா வார்கள். ஒரே வீட்டில் இரண்டு, மூன்று குடும்பங்களாக வசித்து வரும் அவலநிலையில் உள்ளனர். எனவே இல வச மனைப்பட்டா வழங்கி அரசு தொகுப்பு வீடு கட்டித்த ருமாறு திங்களன்று மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி யிடம் அப்பகுதியைச் சேர்ந்த அருந்ததிய மக்கள் மனு அளித்தனர்.