tamilnadu

img

வெளி மாவட்டத்திலிருந்து வந்தவர்கள் தாமாக முன் வந்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை, ஜூன் 21- கோவை மாவட்டம் கரு மத்தப்பட்டி, சோதனைச் சாவடியில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி வாகன சோதனை மேற் கொண்டார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் தெரிவிக் கையில், கோவை மாவட் டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மிகத் தீவிரமான முறையில் மேற்கொள்ளப் பட்டு வருகின்றது. விமான நிலையம், ரயில் நிலையம்,மற்றும் சாலை மார்க்கமாக வருவோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அறிகுறி கண்டறியப் பட்டவர்கள் கோவை இ.எஸ்.ஐ மருத்துவ மனையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட் டுள்ளனர்.

வெளிமாவட்டத்திலிருந்து கோவை மாவட்டத்திற்கு அனுமதி இல்லா மல் வந்திருந்தால் தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பொது வெளிகளில் வரும் அனை வரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண் டும். தனிமனித இடைவெளியை பின்பற் றாத கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தர விடப்பட்டுள்ளது.  

மேலும், மக்களின் வாழ்வாதரத்தினை பாதுகாக்கவும், இயல்பு நிலை பாதிக்கப்ப டாமல் இருக்கவும் அறிவிக்கப்படும் இத்த ளர்வு காலத்தில் பொதுமக்கள் தனிமனித இடைவெளியினை கடைபிடித்து, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எடுக்கப்படும் அனைத்து நோய்த் தடுப்பு நடவடிக்கை முயற்சிகளுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.

;