மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மலைவாழ் மக்களுக்கு நிவாரண பொருள் வழங்கல்
பென்னாகரம், மே 8- ஒகேனக்கல் வனப்பகுதியை ஒட்டி வசிக்கும் மலைவாழ் குடும்பங்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல் வனப்பகுதியை ஒட்டியுள்ள தொட்டிபலம் என்ற கிராமத் தில் சுமார் 40க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும் பத்தினர் வசித்து வருகின்றனர். கொரோனா பாதிப்பின் கார ணமாக தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்தனர். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் அரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் பி.டெல்லிபாபு தலைமையில் 40க்கும் மேற்பட்ட குடும் பங்களுக்கு தலா 15 கிலோ அரிசி, ரூ.200 மதிப்புள்ள காய் கறிகள், பருப்பு, எண்ணெய், மாவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் மலையன், மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கிருஷ்மேரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட குழு உறுப்பினர்கள் பூபதி, சிவா, பென்னா கரம் பகுதி குழு செயலாளர் கே.அன்பு, பகுதி குழு உறுப்பி னர்கள் ஜீவானந்தம், மாரிமுத்து, மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வெளி மாநிலத் தொழிலாளர்களை கட்டணம் வசூலிக்காமல் ரயிலில் அனுப்பிடுக - சிஐடியு
திருப்பூர், மே 8 - திருப்பூரில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும் பும் வெளி மாநிலத் தொழிலாளர்களை கட்டணம் வசூலிக் காமல் அரசு செலவில் அவர்களை ரயிலில் அனுப்பி வைக்க வேண்டும் என்று சிஐடியு மாவட்டத் தலைவர் கே. உண்ணிகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார். இது குறித்து வெள்ளியன்று சிஐடியு மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை யில், திருப்பூரில் தங்கியுள்ள வெளி மாநிலத் தொழிலா ளர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல தவித்துக் கொண்டி ருக்கின்றனர். எனவே அவர்களை சொந்த ஊருக்குச் சென்று வருவதற்கு அரசு நிர்வாகம் உடனடியாக ஏற் பாடு செய்ய வேண்டும். ஏற்கெனவே புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்வதற்கான ரயில் கட்டணத்தில் 85 சதவிகிதத்தை ரயில்வே வாரியம் ஏற்றுக் கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டது. அதேசமயம் அந்த அறிவிப்பின் அடிப்படையில் அதிகாரப்பூர்வ ஆணை எதுவும் வெளியிடப்படவில்லை என்றும் தகவல் வந்துள்ளது. தொழிலாளர்கள் ஏற்கெனவே கையில் பணம் இல் லாமல், உணவுக்கு வழியின்றி செய்வதறியாது திகைத்து வரும் நிலையில், அவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வ தற்கு முழு பயணச் செலவையும் அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர்களது பயணத்திற்கு அரசு உடனடியாக உரிய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சிஐடியு சார் பில் கேட்டுக் கொள்வதாக கே.உண்ணிகிருஷ்ணன் கூறி யுள்ளார்.
சாராயம் காய்ச்சிய இருவர் கைது
உதகை. மே, 8 - உதகை அருகே சாரா யம் காய்ச்சிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள தேவர் சோலை எஸ்டேட் டில் வசிப்பவர் கருணாக ரன். இவர் தனது வீட்டின் பின்புறம் சாராயம் காய்ச்சு வதாக காவல் துறையின ருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அங்கு சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த தேவர் சோலை எஸ்டேட் பாலகொலா பகுதியில் வேலை செய்து வந்திருந்த கருணாகரன் (35) மற்றும் பெங்காலை சேர்ந்த பிரஞ்சு சுபா(29) ஆகிய இருவரை யும் காந்தள் காவல்துறை யினர் கைது செய்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.