tamilnadu

img

புதிய கல்வி கொள்கை, சுற்றுச்சூழல் வரைவுக்கு எதிர்ப்பு பெரியாரியக் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

கோவை, ஆக. 12 -  புதிய கல்விக் கொள்கை மற்றும் சுற்றுச் சூழல் வரைவுச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி கோவையில் பெரியாரிய உணர்வா ளர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை தெற்கு வட்டாட்சியர் அலு வலகம் முன்பு பெரியாரிய உணர்வாளர் கள் கூட்டமைப்பினர் நடத்திய ஆர்ப்பாட் டத்தில் திராவிடர் கழகத்தினர், தபெதிக வினர் மற்றும் திவிக உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.

இதில் புதிய கல்விக் கொள்கை மற்றும் சுற்றுச் சூழல் வரைவுச் சட்டம் 2020 ஆகியவற்றை கண்டித்து முழக்கங்களை எழுப்பியதோடு புதிய கல்விக் கொள்கை குலக் கல்வித் திட்டத்தை அமல்படுத்தும் வகையில் இருப் பதாகவும், இந்தியைத் திணிக்க முயல்வதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர்

.  மேலும், சுற்றுச்சூழல் வரைவுச் சட்டம், தனியார் பெருநிறுவனங்கள் இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்க உதவும் வகையில் இருப்பதாகவும், இது ஒட்டு மொத்த மக்களுக்கும் எதிரான வகையில் இருப்பதாகவும் கூறிய அவர்கள், இச்சட்டங் களைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;