tamilnadu

img

பன்முக கால்நடை மருத்துவமனை திறப்பு விழா

கோபி, ஜன.31- கோபிசெட்டிபாளையம் கால்நடை  மருத்துவமனை பன்முக மருத்துவமனை யாக தரம் உயர்த்தப்பட்டதை அமைச்சர் கள் செங்கோட்டையன் மற்றும் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் திறந்து வைத்த னர்.  ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையம் கால்நடை மருத்துவமனை யில், தமிழகத்தில் முதன் முறையாக அமைக் கப்பட்ட கால்நடை பராமரிப்புத்துறை பன்முக கால்நடை மருத்துவமனையை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை  ராதாகிருஷ்ணன் ஆகியோர் திறந்துவைத் தனர்.  இதனைத்தொடர்ந்து செய்தியாளர் களை சந்தித்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேசுகையில், தமிழகத் தில் கோபிசெட்டிபாளையம் மற்றும் உடு மலை ஆகிய இரண்டு இடங்களில் கால் நடை பன்முக மருத்துவமனை அமைக்கப் பட்டுள்ளது. இம்மருத்துவமனை 24 மணிநேரமும் செயல்படும் வகையில் மருத்துவர்கள் பணியில் அமர்த்தப்பட்டு ஸ்கேன், அறுவை சிகிச்சை உள்ளிட்ட அனைத்து சிகிச்சையும் அளிக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் பிப். 9 ஆம் தேதியன்று சேலத்தில் 1700 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த கால்நடைப் பூங்காவை முதல்வர் தொடங்கி வைக்கவுள்ளார். அதில் கால்நடை மருத்துக்கல்லூரி கால் நடை ஆராய்ச்சி நிலையமும், விவசாயி களுக்கு தேவையான தீவன ஆராய்ச்சி மையமும், அமையவுள்ளது. மேலும், ஆடு  கோழி உள்ளிட்ட இறைச்சிகளை வெளிநா டுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இவ்விழாவில் கால்நடை பராமரிப் புத்துறை இணை இயக்குநர் குழந்தைசாமி, கோட்டாட்சியர் ஜெயராமன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;