பொள்ளாச்சி, பிப்.26- பொள்ளாச்சியை அடுத்த ஜமீன் ஊத்துக்குளி அரசுப்பள்ளியில் மாண வனை தாக்கிய சத்துணவு அமைப்பா ளரை கண்டித்து, மாணவரின் பெற் றோர் பள்ளியினை முற்றுகையிட்ட னர். கோவை மாவட்டம், பொள்ளாச் சியை அடுத்த ஜமீன் ஊத்துக்குளி பகுதியில் ஊராட்சித் தொடக்கப் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் நூற் றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியில் சத்துணவு அமைப் பாளராகப் பணிபுரிந்து வருபவர் மதுராந்தகி. இவர் திங்களன்று அதே பள்ளியில் நான்காம் வகுப்பு பயிலும் சுஜித்(9) என்ற மாணவனை பிரம்பால் அடித்துள்ளதாக கூறப்படுகி றது. இதுகுறித்து செவ்வாயன்று தகவல் அறிந்து வந்த மாணவ னின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சத்துணவு அமைப்பாளர் மீது நடவ டிக்கை எடுக்கக்கோரி, பள்ளியின் முன்பு முற்றுகையிட்டு போராட்டத் தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொள்ளாச்சி வட்டார வளர்ச்சி அலுவலர் ராதாகி ருஷ்ணன் மற்றும் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வளர் சின்னக்காமணன் ஆகியோர் மாணவ னின் பெற்றோர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இப்பேச்சுவார்த்தையில் சத்து ணவு அமைப்பாளர் மதுராந்தகி மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்ப டுமென உறுதியளித்தனர். இதன்பின் னர் அனைவரும் கலைந்து சென்ற னர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.