tamilnadu

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு சிறப்பு சலுகைகள்

கோவை, டிச.26- பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு  சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிஎஸ்என்எல்-ன் பிளான் 1999 சந்தாதா ரர்களுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண் டிகையை முன்னிட்டு கவர்ச்சிகரமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி 60 நாட்கள் கூடுதல் வேலிடிட்டியுடன் அளவில்லா அழைப்பு கள் அனைத்து நெட்வொர்க்கிற்கும், தினமும் 3 ஜிபி  டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகியவை 365  நாட்களுக்கு பதிலாக 425 நாட்களுக்கு நீட்டிக் கப்பட்டுள்ளது. மேலும் சில சிறப்பு அம்சங்க ளாக பிளான் 1999-ல் பிஎஸ்என்எல் டியூன்  மற்றும் பிஎஸ்என்எல் டிவி சந்தா 365 நாட்க ளுக்கு இலவசமாக வழங்குகிறது. இச்சலுகை 31.1.2020 வரை அமலில் இருக்கும். இவை தவிர கூடுதல் டாக் டைம் சலுகையாக ரூ.250 ரீச்சார்ஜுக்கு ரூ.275ம், ரூ.450 ரீச்சார்ஜுக்கு  ரூ.500ம் என புதிய சலுகைகள் 2.1.2020 வரை கிடைக்கும். மேலும், பிஎஸ்என்எல் சமீபத்தில் ரூ.97 மதிப்புள்ள சிறப்பு கட்டண வவுச்சரை  அறிமுக்கப்படுத்தியுள்ளது. அதில் அனைத்து  நெட்வொர்க்கிலும் அளவற்ற அழைப்புகள், தினசரி 2ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ், பிஎஸ்என்எல் டிவி சந்தா ஆகிய சிறப்பு அம்சங்கள் 18 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கும்.

;