tamilnadu

img

ஏழை, எளிய மக்களுக்கு மோடி ஆட்சியால் எந்த பலனுமில்லை சிபிஐ பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி குற்றச்சாட்டு

கோவை, ஏப். 8-

கார்ப்பரேட் நிறுவனங்கள் பல லட்சம் கோடி ரூபாய் லாபம் சம்பாதிக்கும் நிலையில், நாட்டின் பல கோடி ஏழை, எளிய மக்களுக்கு மோடி ஆட்சியால் எந்த பலனும் கிடைக்கவில்லை என சிபிஐ அகில இந்தியபொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி குற்றம்சாட்டினார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளராக பி.ஆர்.நடராஜன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து ஞாயிறன்று மாலை கோவை சித்தாபுதூரை அடுத்த வி. கே. கே மேனன் சாலையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.எஸ்.சுந்தரம் தலைமை வகித்தார். கிழக்கு பகுதி செயலாளர் மூவா கல்யாணசுந்தரம் வரவேற்று பேசினார். இந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில்,மோடி தலைமையிலான பாஜக அரசுகடந்த ஐந்தாண்டு காலத்தில் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. குறிப்பாக, கறுப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக கூறினார். ஆனால், 15 ரூபாய் கூட போடவில்லை. மாறாக, ரபேல் விமானம் வாங்கும் ஒப்பந்தத்திற்காக திவால் என்று அறிவிக்கப்பட்டிருந்த ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு மக்கள் பணம் ரூ.30 ஆயிரம் கோடியை எடுத்து கொடுத்துள்ளார்.மேலும், நாட்டையும், வங்கிகளையும் ஏமாற்றிவிட்டு வெளிநாடுகளுக்கு ஓடிய லலித்மோடி, நீரவ்மோடி, சோக்சி போன்றவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கார்ப்பரேட் நிறுவனங்கள் பல லட்சம் கோடி லாபம் சம்பாதிக்கும் நிலையில், நாட்டின் பல கோடி ஏழை, எளிய மக்களுக்கு மோடி ஆட்சியால் எந்த பலனும் கிடைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக, இந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன், திமுக மாநகர மாவட்ட பொறுப்பாளர் நா. கார்த்திக் எம்எல்ஏ, மதிமுக மாநகர மாவட்ட செயலாளர் ஆர். ஆர். மோகன் குமார், கொமதேக மாநகர் மாவட்ட செயலாளர் ஆர். எஸ். தனபால், விசிக மாநகர் மாவட்ட செயலாளர் ஜோ. இலக்கியன், ஐஜேகே மாவட்ட தலைவர் எஸ். பூரணசந்திரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்று பேசினர். இந்த பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், முன்னணி ஊழியர்கள் மற்றும்பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

;