tamilnadu

img

அரசு கலைக்கல்லூரி மாணவி மர்ம மரணம் வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை, ஜூன் 18- கல்லூரி மாணவி தவறான சிகிச்சை யால் உயிரிழந்ததாக கூறி கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் செவ்வா யன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  கோவைபுதூர், நேதாஜி நகரைச் சேர்ந்த சத்யபிரியா அரசு கலைக்கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்தவர். இவர் கடந்த சில மாதங்களாகவே  உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனை யடுத்து செல்வபுரம் பகுதியில் உள்ள மனோன்மணி சித்த வைத்திய சாலையில் ஆறுமாத காலமாக சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்த மருந்துகள் அவருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தியுள்ளது. உடல் நிலை மேலும் மோசமான நிலையில் சத்ய பிரியா கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி கோவை  அரசு மருத்துவமனையில் உள்நோயாளி யாக அனுமதிக்கப்பட்டார்.  முன்னதாக சித்த மருத்துவர் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என சத்ய பிரியாவின் பெற்றோர்கள் செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தி ருந்தனர். ஆனால் எவ்வித விசாரணையும் காவல்துறையினர் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் திங்களன்று சத்யபிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை யடுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  இதன்தொடர்ச்சியாக செவ்வாயன்று கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர் கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். அப்போது செல்வ புரம் காவல் ஆய்வாளர் மற்றும் சித்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும். உயிரிழந்த மாணவியின் குடும்பத் திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்.

சித்த மருத்துவர்கள் மனு
இதனிடையே கல்லூரி மாணவி உயிரி ழந்ததற்கு சித்த மருத்துவர் தான் காரணம் என பொய்யான தகவல் பரப்பி வருவதாக சித்த மருத்துவர்கள் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் செவ்வாயன்று மனு அளித்த னர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, தங்களது சங்கம் கடந்த 50 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. உயிரிழந்த மாணவி கடந்த ஒரு வருட காலமாகவே இந்த பாதிப் புக்குள்ளாகியுள்ளார். கடந்த சில நாட்க ளுக்கு முன் சித்தமருத்துவரை நாடிய அந்த மாணவிக்கு உரிய தரச்சான்று பெற்ற மருந் துகள் வழங்கப்பட்டுள்ளது. மாணவிக்கு ஆங்கில மருந்துகள் உட்கொள்ளக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும், இந்த சம்பவத்தில் மாணவியின் உயிரி ழப்புக்கு சித்தமருத்துவமோ, மருத்துவரோ காரணமல்ல. சித்த மருத்துவத்தின் மீது பொய்யான தகவல் பரப்பி வருகின்றனர். தமிழகத்தில் பாரம்பரிய சித்த மருத்துவர்கள் தொழில் சுதந்திரத்துடன் தொழில் புரிய பாதுகாப்பு செய்து தர வேண்டும், என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

;