tamilnadu

img

வெற்றியை மாற்றி அறிவிப்பதா?

அதிகாரிகளைக் கண்டித்து எம்.பி-எம்எல்ஏ மறியல்

கரூர்,ஜன.3- க.பரமத்தி ஒன்றியத்தில் காங்கிரஸ் வேட்பாளர்க ளின் வெற்றியை மாற்றி அறிவித்ததாகக் கூறி ஜோதி மணி எம்.பி., செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ. ஆகியோர்  சாலை மறியலில் ஈடுபட்டனர். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் 27 மாவ ட்டங்களில் மட்டும் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றன. ஜனவரி 2 அன்று  தொடங்கிய வாக்கு எண்ணிக்கை, 3 ஆம் தேதியன்றும்  தொடர்ந்து நடைபெற்றது.  க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக ளில் திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றி யை மறைத்து அந்த 2 வார்டுகளில் அதிமுகவினர் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் க.பரமத்தி அரசு உயர்நிலைப்பள்ளி மையத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாலை 3 மணிக்கு தொடங்கிய போராட்டம் வெள்ளியன்று காலை 10.15  மணி வரை நீடித்தது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி  மற்றும் கட்சியினர் பங்கேற்றனர்.தேர்தல் அதிகாரிகள்  யாரும் பேச்சுவார்த்தை நடத்த வரவில்லை. அதிகாரிகள் வராததை கண்டித்தும், திமுக மற்றும்  காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றியை அறிவிக்க  கோரியும் ஜோதி மணி, வி.செந்தில் பாலாஜி உட்பட  500-க்கும் மேற்பட்டோர் வாக்கு எண்ணிக்கை நடைபெ றும் மையம் முன்பு தேசிய நெடுஞ்சாலையில் மறியல்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

;