tamilnadu

கோவையில் மேலும் 177 பேருக்கு கொரோனா பாதிப்பு

கோவை, ஜூலை 21- கோவையில் அதிவிரைவுப்படை வீரர்கள் 3 பேர் உட்பட 177 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கோவையில் கொரோனா தொற்று பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரு கிறது. இந்நிலையில், செவ்வாயன்று வெளி யான பரிசோதனை முடிவுகளில் 17 குழந்தை கள், 65 பெண்கள் உட்பட 177 பேருக்கு செவ்வாயன்று கொரோனா தொற்று உறுதி யாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத் தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்து 360 ஆக அதிகரித்துள்ளது.

செவ்வாயன்று அதிகபட்சமாக செல்வபுரம் பகுதியில் 14 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.  இதேபோல் குனியமுத்தூர் பகுதியில் 7 பேருக்கும், ஆர்.ஜி.வீதியில் 7 பேருக்கும், வெரைட்டி ஹால் சாலையில் 6 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் சுகுணாபுரம் பகுதியில் 5 பேருக்கும், குறிச்சி மற்றும் சாவித்திரி நகர் பகுதிகளில் 5 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. வெள்ளலூர் பகுதி யில் அதிவிரைவுப் படை வீரர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் பணி புரியும் 24 வயது பெண் காவலர் மற்றும் போத்த னூர் காவலர் குடியிருப்பில் 33 வயது காவல ருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலை யில், கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந்த 72 பேர் குனம டைந்து வீடு திரும்பினர்.

;