tamilnadu

img

ஏற்காட்டில் மருத்துவ முகாம்

ஏற்காடு, செப்.27- ஏற்காட்டில் மருத்துவ முகாம் மற்றும் தூய்மை  பணிகளில் தனியார் பள்ளி மாணவர்கள் ஈடு பட்டனர். மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த நாளை யொட்டி, சேலம் ஹோலி கிராஸ் பள்ளியின் நாட்டு நலப்பணி திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் மற்றும்  தூய்மை பணிகள் நடைபெற்றது. மருத்துவ அலுவ லர்கள் தாம்சன், விஜய், சத்தியம் ஆகியோர் தலை மையில் ஜெரினாக்காடு கிராமத்தில் சிறப்பு மருத்துவ  முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 100க்கும் மேற் பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது உடல்நிலை குறித்து பரிசோதித்து கொண்டனர். மேலும் பொதுமக்களுக்கு மருந்துகள் மற்றும் ஆலோ சனைகள் வழங்கப்பட்டன.  இதையடுத்து மாணவர்கள் தன்னார்வ பணிகளில் ஈடுபட்டனர். இதில் ஜெரினாக்காடு கிராமத்தில் குவிந்துகிடந்த பழைய டயர்கள், குப்பைகளை அப் புறப்படுத்தினர். மேலும், வீடுகள் மற்றும் பொது இடங் களில் தேவையின்றி தேங்கியிருந்த தண்ணீரை அப் புறப்படுத்தினர். இப்பணிகளில் சேலம் ஹோலி கிராஸ் பள்ளியை சேர்ந்த 60 மாணவர்கள் ஈடு பட்டனர்.