tamilnadu

img

நரிக்குறவர்களுக்கு மனைப்பட்டா வழங்க நடவடிக்கை

ஊத்தங்கரை, அக்.12- ஊத்தங்கரை அருகே உள்ள  காட்டேரி பகுதி நரிக்குறவர் களுக்கு மனைப்பட்டா வழங்கக் கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் நடத்திய தொடர் போராட்டத்தின் விளை வாக சனியன்று வருவாய்த்துறை மூலம் மனைப்பட்டா அளவிடும் பணி நடைபெற்றது.  கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம் காட்டோரி  ஊராட்சிக்குட்பட்ட  காட்டேரி கிராமத்தின் அருகே வேப்பாளம் பட்டி கிராமத்தில் அரசு புறம் போக்கு நிலத்தில் சுமார் 100க்கு  மேற்பட்ட நரிக்குறவர் குடும்பத் தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் ஊசி, பாசி விற்பனை செய்து வாழ்ந்து வருகின்றனர். இம்மக்கள் குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதிகளான குடிநீர்,  மின்சாரம், கழிப்பறை இல்லை. மேலும் குடிநீருக்காக அருகில் உள்ள கிராமங்களில் உள்ள விவ சாய கிணறுகளுக்கு சென்றால்  குடிநீர் எடுப்பதற்கு அனுமதிப்ப தில்லை. பெண்கள் இயற்கை உபாதை கழிக்க கழிப்பிட வசதி  இல்லாததால் பெரும் சிரமத்திற் குள்ளாவதுடன், சமூக விரோதி களின் தாக்குதலுக்கும் உள்ளாகி வருகின்றனர். இதையடுத்து, அகில இந்திய  விவசாய தொழிலாளர் சங்கம்  சார்பில், நரிக்குறவர் குடியிருப்பு  பகுதிக்கு இலவச மனைப் பட்டா, குடிநீர், மின்சாரம், தெரு விளக்கு, வீட்டுவரி ரசீது மற்றும்  கழிப்பிடம் உள்ளிட்ட அடிப் படை வசதிகள் செய்து தரக் கோரி  ஊத்தங்கரை வட்டாட்சியர்  மற்றும் வட்டார வளர்ச்சி அலுவ லரிடம் மனு அளிக்கப்பட்டது.

 மேலும் இயற்கை உபாதைக்கு செல்லும் பெண்களுக்கு மிரட்டல் குறித்து ஊத்தங்கரை காவல்நிலையத்தில் புகார்மனு அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நேரில் வந்து காவல்துறையினர் விசா ரணை மேற்கொண்டனர். இதையடுத்து அக்.2ஆம் தேதி  கிராமசபை கூட்டத்தில்,  குடிநீர்,  மின்சாரம், வீட்டுவரி ரசீது, தெரு விளக்கு, இலவச மனைப்பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்ற வேண்டும் என அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கத்தின் சார்பில் வைக் கப்பட்ட கோரிக்கையின் அடிப் படையில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.  மேலும், இவர்கள் குடியிருக்கும் பகுதிக்கு மனைப் பட்டா வழங்க வேண்டும் என  விவசாய தொழிலாளர் சங்கத்தின்  சார்பில் போராட்டம் நடத்தப் பட்டது. அப்போது 110 மனுக் களும் வழங்கப்பட்டது. இதனை யடுத்து ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் 60 நபர்களுக்கு குடியி ருப்பு ரசீது வழங்கப்பட்டது. இந்நிலையில் நரிக்குறவர் குடி யிருப்புக்கு நேரில் வந்த வட்டாட் சியர் சித்ரா, வருவாய் ஆய்வாளர், தலைமை சர்வேயர் சதாசிவம், சர்வேயர் ரமேஷ், கிராம நிர்வாக அலுவலர் ஜெயந்தி, ஊராட்சி செயலாளர் சரவணன் மற்றும் காவல்துறையினர், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் வி.கோவிந்தசாமி, மாவட்டப் பொருளாளர் செல்வ ராஜ், நிர்வாகிகள் சுந்தரம், தேவன் சுப்பிரமணி, வேலுஅர்சுணன்  ஆகியோர் குடியிருக்கும் பகுதியை ஆய்வு செய்து அள விடும் பணி நடைபெற்றது. இதன் பின் வட்டாட்சியர் சித்ரா,  இரண்டு  மாதத்தில் நரிக்குறவர் குடியி ருப்புப்பகுதிக்கு பட்டா வழங்கப் படும் என விவசாய சங்க தலை வர்களிடம் தெரிவித்தார்.  

;