கோவை மாநகராட்சியில் 549 நிரந் தர துப்புரவு பணியிடங்கள் காலியாக இருந்தன. இப்பணிகளை நிரப்புவதற் காக சமீபத்தில் விண்ணப்பங்கள் வர வேற்கப்படுவதாக மாநகராட்சியின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. முன்னதாக, இந்த பணிக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதும் என்பது தான் தகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பேரதிர்ச்சியாக இப்பணியி டத்திற்கு பி.இ., எம்.எஸ்.சி., எம்.பி.ஏ., பட்டதாரிகள் உட்பட 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கான நேர்காணல் நடத்தப் பட்டு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் சமீபத்தில் 321 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதில் எம்.எஸ்.சி., எம்.பி.ஏ., பட்டதாரிகளும் துப்பு ரவு பணியாளராக பணி நியமனம் செய்யப் பட்டுள்ளனர்.
இதில், எம்.பி.ஏ. பட்டதாரியான சையத் முக்தார் அகமது என்பவரும் ஒருவ ராவர். கோவை குனியமுத்தூர் இடை யர்பாளையம் பகுதியை சேர்ந்த 35 வய தான சையத், முன்னர் ஹைதராபாத்தில் எம்.என்.சி. நிறுவனம் ஒன்றில் மனித வள மேம்பாட்டு அதிகாரியாக (எச்.ஆர்) பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பி டத்தக்கதாகும். எம்என்சி நிறுவனத்தில் பத்து ஆண்டுகளாக பணியாற்றி வந்த இவர், அரசு வேலை மீது இருந்த ஆர்வம் காரணமாக தற்போது கோவை மாநக ராட்சி மத்திய மண்டலத்தில் துப்புரவு பணி யாளராக பணியாற்றி வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், அரசு வேலை என்பது பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு உள்ளிட்டவை இருப்பதா லும், வேலைக்காக ஒவ்வொரு மாநில மாக இடம்பெயரும் அழுத்தம் இல்லாமல் குடும்பத்துடன் இணைந்திருக்கலாம் என்பதாலும் இந்த பணியில் சேர்ந்துள் ளோம். எந்த பணியும் இழிவானது இல்லை என கருதுவதால் மன நிறைவு டன் பணியாற்றி வருகிறேன். நோய் வந்தால் மருத்துவர்கள் குணப்படுத்தும் பணிகளை செய்வது போல, நோய் வரா மல் தடுக்கும் பணியை துப்புரவு பணியா ளர்கள் செய்கின்றனர். ஆரம்பத்தில் குடும்பத்தினரும், அக்கம் பக்கத்தினரும் துப்புரவு பணியாளர் பணிக்கு செல்ல இருப்பதை அறிந்து, கேவலமாக பார்த்த னர், ஏளலமாக பேசினர்.
ஆனால், துப்புரவு பணியாளர் பணி என்பது மருத்துவர்களின் பணிக்கும் மேலானது. மருத்துவர்கள் வந்த நோயை குணப்படுத்துவார்கள். ஆனால், துப்புரவு பணியாளர்கள் மக்களுக்கு நோய்கள் வரா மல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபவ டுபவர்கள் என்பதனை புரிய வைத்தேன். இந்த வேலைக்கு சேர்ந்து ஒரு வாரம் தான் ஆகிறது. சக பணியாளர்களுடன் சேர்ந்து வேலை பார்க்கும்போது தான் அவர்கள் எந்த அளவிலான இன்னல்களை சந்தித்து வருகிறார்கள், எவ்வளவு சகிப்பு தன்மையு டன் பணி செய்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டேன் என்கிறார் சையத் முக்தார் அகமது. தொழிலில் இழி தொழில் என்று ஒன்று இல்லை என்பது ஏற்கத்தக்கவையே. ஆனால், அது சமூகத்தின் மாற்றத்தில் இருந்து உருவாக வேண்டும். மாறாக, வேலையின்மையின் நெருக்கடியில் இருந்து உருவாகக்கூடாது. ஆகவே, படிப் பிற்கேற்ற வேலை என்கிற கோரிக்கை வலுவாக எழவேண்டிய அவசியம் ஏற்பட் டிருக்கிறது என்பதையே துப்புரவு பணியை நோக்கி எம்.பி.ஏ, எம்.ஏ., பட்ட தாரிகள் துரத்தப்பட்டதன் அவலநி லையை உணர்த்துகிறது.
அ.ர.பாபு