சேலம், ஜூலை 24- முதல்வர் மாவட்டத்தில் தொடரும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் ரீதியான தாக்குதலைக் கண்டித்து சேலத்தில் அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்டம், இளம் பிள்ளை அருகே வேம்படிதாளம் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள் ளது. இந்த பள்ளியில் 1,700 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி யில் பெண் குழந்தைகளின் பாது காப்பு என்பது கேள்விக்குறியா கவே உள்ளது. அண்மையில் பிளஸ் 2 படிக்கும் மாணவி அங்கு உள்ள ஆசிரியரால் பாலி யல் துன்புறுத்தலுக்கு ஆளாக் கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சொந்த மாவட்டத்தில் இதுபோன்ற பெண்கள் மற்றும் பெண் குழந் தைகளுக்கு எதிரான குற்ற சம்ப வங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது போன்ற தாக்கு தலை தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு வருகிறது. எனவே, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலி யல் வன்முறைகளை தடுத்திட வேண்டும். பெண்கள் பணிபுரி யும் நிறுவனங்களில் பெண்க ளின் பாதுகாப்பை உறுதிப்ப டுத்த வேண்டும். விசாகா கமிட் டியை உடனடியாக அமைத்திட வேண்டும். மகளிர் காவல் நிலை யங்கள் உள்ளிட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் பெண் களுக்கு ஆண் காவலர்கள் கவுன் சிலிங் கொடுப்பதை நிறுத்த வேண்டும். பெண்கள் பிரச்சனை களை பெண் காவலர்களை கொண்டு கவுன்சிலிங் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதனன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் டி.பரமேஷ்வரி தலைமை வகித் தார். மாநிலத் துணைத் தலை வர் ஏ.ராதிகா, மாவட்ட செய லாளர் ஐ.ஞானசவுந்தரி, மாவட்ட பொருளாளர் என்.ஜெயலட் சுமி, நிர்வாகிகள் கே.ராஜாத்தி, எஸ்.எம்.தேவி, வைரமணி உள் ளிட்ட ஏராளமானோர் பங் கேற்றனர்.