tamilnadu

img

மகாத்மா காந்தி 150ஆவது பிறந்தநாள் கருத்தரங்கம்

நாமக்கல், அக்.12- மகாத்மா காந்தியின் 150  ஆவது பிறந்த தினத்தை யொட்டி காப்பீட்டு கழக  ஊழியர் சங்கம் சார்பில்  வெள்ளியன்று திருச்செங் கோடு அவ்வை கல்வி  நிலையத்தில் சிறப்பு கருத் தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்திற்கு காப்பீட்டு கழக ஊழியர்  சங்க குமாரபாளையம் கிளை தலைவர் எம்.தமிழ்ச் செல்வன் தலைமை வகித்தார். சேலம்  கோட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் உஷா வரவேற்புரை யாற்றினார். மகாத்மா காந்தியின் மத  நல்லிணக்கம் குறித்து நெல்லை கோட்ட செயலாளர் சி. முத்துக்குமார சாமி உரையாற்றினார்.  சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் அரசு வழக்கறிஞர் டி.கே.ராஜேந்திரன், திருச்செங்கோடு வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் எஸ்.சேகரன் மற்றும் பரணிதரன், பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  

தருமபுரி

இதேபோல் மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த தினத்தையொட்டி, காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் சார்பில் கருத்தரங்கம் தருமபுரி பெரியார் மன்றத்தில் நடைபெற்றது. கிளைத்தலைவர் பி. சந்திரமெளலி தலைமை  வகித்தார். கிளைச் செய லாளர் டி.ஞானசெல்வம் வரவேற்றார். மகாத்மா  காந்தியின்  மதநல்லிணக் கமும்-தேச ஒருமைப்பாடும் என்ற தலைப்பில் இணைச் செயலாளர் எஸ்.ரமேஷ் குமார் சிறப்புரையாற்றி னார். கோட்ட இணைச் செயலாளர் ஏ.மாதேஸ்வரன், தருமபுரி அரசு கல்லூரி பேரா சிரியர் சிவப்பிரகாசம் ஆகியோர்  பேசினர். மகாத்மா காந்தி  குறித்த பேச்சுப் போட்டிகளில் வெற்றி  பெற்ற மாணவர்களுக்கு பரிசு  வழங்கப்பட்டது.  பாலக்கோடு கிளை செயலாளர் எம்.நரசிம்மன் நன்றி கூறினார்.

;