tamilnadu

img

தேயிலை கழிவுகளை ஏற்றி வந்த லாரி சிறைபிடிப்பு ஓட்டுநர் தப்பி ஓட்டம்

மேட்டுபாளையம், ஜன.22- அசாமிலிருந்து போலி டீத்தூள்  தயாரிப்பிற்காக கலப்பட டீத்தூளை  ஏற்றி வந்த லாரியை மேட்டுப்பளை யத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பிடித்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.  அசாமில் உள்ள தனியார் நிறுவ னங்களிலிருந்து தேயிலை கழிவு பொருட்கள் கொண்டு வரப்பட்டு, அதை கலப்படம் செய்து டீத்தூ ளாக மாற்றி அவற்றை நீலகிரியி லுள்ள போலி தேயிலை தூள் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருவதாக கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை  அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.  இதனையடுத்து உணவு பாதுகாப் புத்துறை அதிகாரிகள் ஐந்து பேர் கொண்ட குழுவினர் இது தொடர் பான நடவடிக்கைகளை கண்கா ணித்து வந்தனர். இந்நிலையில் புதனன்று அசாமில் இருந்து கலப் பட தேயிலை கழிவுகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று மேட்டுப்பாளை யம் வருவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதனையடுத்து தேடுதலில் ஈடு பட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் குட்டையூர் மாதேஸ்வ ரன் மலையருகே உள்ள ஒரு பணி மனையில் சரக்கு ஏற்றி வந்த லாரியை தடுத்து நிறுத்தினர்.அப்போது அதிகாரிகளை கண்ட லாரி ஓட்டுநர்  தப்பியோடினார். இதில் சந்தேக மடைந்த அதிகாரிகள் லாரியை சோத னையிட்ட போது லாரியினுள் போலி டீத்தூள் தயாரிக்க உதவும் கலப்பட தேயிலை கழிவுகள் இருப்பதை உறுதி செய்தனர். இதனைத்தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மேற் கண்டு  விசாரணையை நடத்தி வருகின் றனர். ஓட்டுநர் தப்பி ஓட்டம்

;