tamilnadu

img

கூலி உயர்வு கோரி விசைத்தறி தொழிலாளர்கள்

நாமக்கல், மே 3-குமாரபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலிஉயர்வு வழங்கக்கோரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டாரத்தில் பணியாற்றும் விசைத்தறி தொழிலாளர்களுக்கு 75 சதவிகித கூலிஉயர்வு வழங்க வேண்டும். அனைத்து விசைத்தறி கூடங்களிலும் குடிநீர் வசதி, கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். 8 மணி நேர வேலை, இஎஸ்ஐ,பி.எப், அடையாள அட்டை, மிகை நேர பணிக்கு இரட்டிப்பு சம்பளம், மே தினத்திற்கு விடுமுறை அளித்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் வட்டாட்சியர்களிடம் வழங்கி முறையிட்டு வந்தபோதும் தற்போது வரை எவ்வித தீர்வும் காணப்படவில்லை.இந்நிலையில், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கம் சார்பில் வெள்ளியன்று வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் குமாரபாளையம் நகர செயலாளர் கே.பாலுசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் எம்.அசோகன், நிர்வாகிகள் பி. என்.வெங்கடேசன், மோகன், சரவணன், சண்முகம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.

;