tamilnadu

கோபி மற்றும் சேலம் முக்கிய செய்திகள்

கொடிவேரிஅணையில் வெள்ளப்பெருக்கு  கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கோபி, டிச. 2- கொடிவேரிஅணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள் ளதால் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்ச ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோபியை அடுத்துள்ளது கொடிவேரி அணை. கடந்த மாதம் பவானிசாகர் அணையில் முழு கொள்ளளவான 105 அடி தண்ணீர் நிரம்பியது. அதன் பிறகு நீலகிரி மாவட்டத் தில் பெய்த கனமழை காரணமாக அணையின் பாதுகாப்பு கருதி மேல் மதகிலிருந்து சுமார் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் கனஅடிவரை பவானி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட் டதால் கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்தது. இதனால்  கொடிவேரி அணையில் சுற்றுலாபயணிகள் குளிக்க அனு மதிக்கப்பட்டனர். இச்சூழலில் உதகையிலிருந்து சுற்றுலா  வந்த இரு வாலிபர்கள் எதிர்பாராத விதமாக கொடிவேரி அணையில் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். இதனால் சுற் றுலா பயணிகள் குளிக்க மீண்டும் தடைவிதிக்கப்பட்டது.  இந்நிலையில் ஞாயிறன்று திடீரென பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீர் வரத்து 30 ஆயிரம் கனஅடியைத் தாண்டியது. எனவே அணையின் பாதுகாப்பு கருதி 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் கொடிவேரி அணையில் திடீர் வெள் ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட் டுள்ளது.

ஆவின் நிறுவனத்திற்கு நிலம் வழங்கியவர்களுக்கு  40 ஆண்டுகளாக கிரயம் செய்துதரப்படாத மாற்று இடம்

சேலம், டிச. 2- சேலத்தில் ஆவின் நிறுவனத்திற்கு இடம் கொடுத்தவர்களுக்கு வழங்கப்பட்ட மாற்று நிலத்தினை கிரயம் செய்து கொடுக்குமாறு நில உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.   சேலம் மாவட்டம், இரும்பாலை செல் லும் வழியில் தளவாய்பட்டி என்ற கிரா மத்தில் சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் செயல்பட்டு வருகிறது. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் இந்த ஆவின் பால் நிறுவனத்திற்கு தள வாய்பட்டி கிராமத்தை சுற்றியுள்ள சித்த னூர், ரொட்டிக்காரன் வட்டம், பெருமாள் கரடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 25 குடும்பத்தினர் தங்களுக்கு சொந்தமான விவசாய நிலங்களைக் கொடுத்தனர்.  கடந்த 1979ஆம் ஆண்டு அரசு கேட் டுக் கொண்டதன் பேரில் மேற்படி நிறு வனத்திற்கு கொடுத்தவர்களின் வாழ்வா தாரத்தை  கருத்தில் கொண்டு 25 குடும்பங் களுக்கு 38 வீட்டுமனைகள் 3சென்ட் அளவில் இலவசமாக வழங்கப்பட்டன.  ஆனால் நிலம் கொடுத்தவர்களுக்கு இதுவரை வீட்டுமனை பட்டா வழங்கப் படாததுடன், கிரையம் செய்து கொடுக் கப்படவில்லை. இதுகுறித்து நிர்வாகத்தில் முறையிட்டதை தொடர்ந்து கடந்த 5.5.1987  நிர்வாக குழு கூட்டத்தில் பால்வளத்துறை ஆணையரின் அனுமதி பெற்று கிரயம் செய்து கொடுக்க வழங்கலாம் என தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதன் பின்னரும் ஆவின் நிர்வாகம் கிரயம்செய்து கொடுக்காமல் இருப்பதால் வீடு கட்டவும், வாரிசுகளுக்கு நிலங்களைப் பிரித்துக் கொடுப்பதிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் தலை யிட்டு ஆவின் நிர்வாகத்திற்கு இடம் கொடுத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தைக் கிரயம் செய்து கொடுக்க உடனடி  நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தி ஆவின் நிறுவனத்திற்கு இடம் கொடுத்தவர்கள் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

;