திருப்பூர், ஜூன் 10 – திருப்பூர் கே.செட்டிபாளையம் பகுதியில் கொடுத்த கடனைத் திரும்பச் செலுத்தவில்லை எனக் கூறி சொந்தவீட்டை மோசடியாக எழுதி வாங்கிக் கொண்டதாக கந்துவட்டி கொடுத்தவர் மீது கடன் வாங்கிய குடும்பத்தார் திருப்பூர் மாவட்ட ஆட்சி யரிடம் புகார் அளித்தனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத் துக்கு திங்களன்று மா.காளீஸ்ரவன் என்பவர் அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வந்து ஆட்சியரிடம் மனு அளித்தார். இது தொடர்பாக அவரது மனைவி கண்ணீருடன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருப்பூர் கே.செட்டிபாளையம் வெங் கடேஸ்வரா நகரில் நாங்கள் குடியி ருந்து வருகிறோம். பைனான்ஸ் நடத்தி வரும் சேகர் என்பவர் எங்களுக்கு கடன் கொடுத்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய கடனுக்கு தொடர்ந்து வட்டி செலுத்தி வந்தோம். ஆனால், கடன் தொகையை முழு மையாக செலுத்தவில்லை என்று சொல்லி எனது பெயரில் இருக்கும், நாங்கள் வசித்து வரும் வீட்டை ஆக் கிரமிப்பு செய்து எங்களை வெளி யேறும்படி என்னையும், எனது குடும்பத்தாரையும் மிரட்டி வருகிறார். அத்துடன் இங்கு நாங்கள் மனு கொடுக்க வந்ததை அறிந்து நல்லூர் காவல் நிலையத்தில் சேகர் எங்கள் மீது புகார் கொடுத்திருக்கிறார். ஆகவே, என் மீதான வழக்கை திரும்பப் பெற்று, எனது சொந்த வீட்டை மீட்டுத்தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.