tamilnadu

கண்டிவழி மலை கிராம வீடுகள் சீரமைக்கப்படும் கோவை மாவட்ட ஆட்சியர் உறுதி

 கோவை, ஆக.21- கண்டிவழி மலைகிராமத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தினால் சேதமடைந்த குடியிருப்புகளை சீரமைக்கும் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி உறுதி யளித்துள்ளார். கோவை மாவட்டம், ஆனைகட்டி மலைப் பகுதியில் உள்ள கண்டிவழி பழங்குடியின கிராமத்தில் 30 ஆண்டு கள் பழமையான வீடுகளில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் பருவமழையின் காரணமாக, 20க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரை சேதமடைந்துள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி யுள்ளனர்.  மேலும், பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் ரூ.2.1 லட்சம்  ஒதுக்கீடு செய்தும், அங்குள்ள மலைவாழ் மக்கள் தினக்கூலிக்கு செல்வதால், எஞ்சிய தொகையை போட்டு கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாக அதிகாரிகள் பாதிக் கப்பட்ட மலைவாழ் கிராமங்களுக்குச் சென்று ஆய்வு செய்தனர். பின்னர், சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் கட்டித் தர முடிவு செய் துள்ளனர். மேலும், பல்வேறு அரசு துறைகள், தனியார் அமைப்புகளும் பழங்குடியின மக்களின் வீடுகளை சீரமைக்கும் பணிகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளன. இந்நிலையில், மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட கண்டிவழி மலை கிராமத்தில் மாவட்ட ஆட்சி யர் கு.ராசாமணி செவ்வாயன்று நேரில் ஆய்வு மேற் கொண்டார். அப்போது, அங்குள்ள 20 குடியிருப்புவாசி களுக்கு மொத்தம் ரூ.82 ஆயிரம் நிவாரணத் தொகையை வழங்கினார். மேலும், வெள்ளத்தினால் சேதமடைந்த குடியிருப்புகளை சீரமைக்கும் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும் எனவும், தற்போது வழங்கப்பட்டுள்ள தொகை தற்காலிகமாக மேற்கூரைகளை சரிசெய்வதற் குத்தான் எனக் கூறினார்.

;