tamilnadu

img

கரையூர் அரசு பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா

தாராபுரம், ஜூலை 18 - தாராபுரம் அடுத்த கரையூர் அரசு பள்ளியில் காம ராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாள் விழாவாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் முன்னாள் முதல்வர் பெருந் தலைவர் காமராஜர் பிறந்தநாள் (ஜூலை 18) கல்வி வளர்ச்சி நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. தாராபுரம் அடுத்த கரையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காமராஜர் 117 ஆவது பிறந்த நாள் விழா நடைபெற்றது. காமராஜின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செய்யப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியை வி.கல்பனா தேசியக்கொடியை ஏற்றி  வைத்து காமராஜரின் ஆட்சிகாலத்தில் கொண்டுவரப்பட்ட இலவச சீருடை திட்டம், மதிய உணவு திட்டம், கிராமங்கள்  தோறும் பள்ளிக்கூடம், அணைகள் கட்டியது மற்றும் காம ராஜரின் எளிமையான வாழ்க்கைமுறை, நேர்மை, கல்வி வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பு குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.  விழாவில் கட்டுரை, பேச்சு, பாட்டு போட்டி நடத்தப் பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு  தெரிவிக்கப்பட்டன. இதில் பள்ளி ஆசிரியைகள் ஜானகி பிரியா, சீமாட்டி, பாக்யலட்சுமி மற்றும் பள்ளி மேலாண்மை  குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பி னர்கள் பலர் கலந்து கொண்டனர்.  நிறைவாக மாணவர்கள்  மற்றும் பெற்றோர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

;