tamilnadu

img

சம்பளம் வழங்காமல் இழுத்தடிக்கும் ஜெய்ஹிந்த் ஸ்பின்னிங் மில்

நாமக்கல், செப். 10- ஜெய்ஹிந்த் ஸ்பின்னிங் மில் நிர்வாகம் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காமல் இழுத்தடிப்பதை கண்டித்து ஆலை முன்பு தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். நாமக்கல் அருகே புதுசத்திரத்தில் இயங்கி வரும் ஜெய்ஹிந்த் ஸ்பின்னிங் மில் லில் சுமார் 300 தொழிலாளர்கள்  பணிபுரிந்து வருகின்றனர். இந்த ஆலை நிர்வாகம் கடந்த இரண்டு மாதங்களாக தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காததை கண்டித்தும், தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த தொகையை உடனடியாக பிஎப் அலுவல கத்தில் செலுத்த வேண்டும் என வலியுறுத்தி யும் ஆலை முன்பு நாமக்கல் மாவட்ட பஞ் சாலை தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார் பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் கிளைத் தலைவர் கர்ணன் தலைமை வகித் தார். கிளை செயலாளர் கனகராஜ், பொரு ளாளர் துரைசாமி  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  பஞ்சாலைத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எஸ். தனபால் கோரிக் கைகளை விளக்கிப் பேசினார். சிபிஎம் ஒன் றிய செயலாளர்  என்.ஜோதி வாழ்த்தி பேசி னார். இதில் ஏராளமான தொழிலாளர்கள்  கலந்து கொண்டனர்.