tamilnadu

ஊழியர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் ஐடி நிறுவனம் மத்திய, மாநில அரசுகள் தலையிட கோரிக்கை

கோவை, ஜூலை 4– பொது முடக்கத்தைப் பயன்படுத்தி ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை பணியில் இருந்து விரட்டியடிப்பதா கவும், மத்திய, மாநில அரசுகள் உட னடியாக தலையிட வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியரிடம் ஐடி ஊழியர் சங்கத்தினர் புகார் மனு அளித் தனர்.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் சனியன்று கோவையில் செயல்படும் தகவல் தொழிற்நுட்ப ஊழியர் அமைப்பின் இணை செயலா ளர் பாரதிதாசன் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது, இந்தியா முழு வதும் கொரோனா நோய்ப் பரவல் அதி கரித்துள்ள சூழலில் ஐடி நிறுவன ஊழி யர்கள் வீட்டிலிருந்தே வேலை செய் யும் நடைமுறையை பின்பற்றி வருகி றது. பலஐடி நிறுவனங்கள் ஊழியர்க ளிடம் பல மணிநேரம் வேலை வாங்கப் படுகிறார்கள். தற்போதைய தொழில் நெருக்கடியை உணர்ந்து தொழிலா ளர்களும் வேறு வழியில்லாமல் வேலை செய்து வருகின்றனர்.  

இந்நிலையில், கோவையில் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் இயங்கி வரும் சி.டி.எஸ் நிறுவனம் தனது தொழிலாளர்களை வலுக்கட் டாயமாக வெளியேற்றும் நடவடிக் கையை மேற்கொண்டுள்ளது. கொரோனா நோய் பரவி, அனைவ ரும் வீட்டிலேயே முடங்கி இருக்கும் மோசமான சூழலிலும் கூட திரும்ப வும் ஊழியர்களின் செயல்திறன் குறைவு என்ற வழக்கமான பொய்க் காரணங்களைக் கூறி 9 முதல் 10 வரு டங்கள் வரை அந்நிறுவனத்திற்காக உழைத்தவர்களை வெளியேற்றும் நட வடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இத்தகையே பேரிடர் காலத்தில் நிறுவனங்கள் தொழிலாளர்களை வெளியேற்றக் கூடாது என பிரதமர், முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ள னர். ஆனால், சி.டி.எஸ் நிறுவனம் சட்ட விரோதமாக ஊழியர்களை வெளி யேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள் ளது.

அனுபவம் வாய்ந்த தொழிலா ளர்களை வலுக்கட்டாயமாக வெளி யேற்றியும், வெளியேற வற்புறுத்தி யும் சி.டி.எஸ் நிறுவனம் மேற்கொண் டுள்ளது. தற்போதைய சூழலில் வேலை பறிக்கப்பட்டவர்கள் எந்த வேலைக்கும் சேரமுடியாத சூழலில் தொழிலாளர்கள் கடும் மன உளைச்ச லுக்கும், நெருக்கடிக்கும் ஆளாகியுள்ள னர். எனவே, தமிழக அரசும், தொழிலா ளர் நலத்துறையும் தலையிட்டு சி.டி. எஸ் நிறுவனத்தின் இந்த சட்டவிரோத வலுக்கட்டாய வெளியேற்றலின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் தெரிவித்துள்ளார்.

;