tamilnadu

img

கிரயம் பெற்ற மனைகளுக்கு செல்லவிடாமல் கொலை மிரட்டல்: அரசு ஊழியர்கள் புகார்

திருப்பூர், ஜன. 13 – திருப்பூர் அருகே பொங்குபாளை யம் ஊராட்சியில், அரசு ஊழியர் நகர் என மனைப் பிரிவுகள் அமைக்கப்பட்டு அதில் கிரயம் பெற்றவர்களை காவல் துறை செல்வாக்கு பெற்ற நபர்கள் உள்ளே விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுப்பதாக பாதிக்கப்பட் டோர் புகார் கூறியுள்ளனர். இதுபற்றி திருப்பூரைச் சேர்ந்த வி.திருக்கை வேலு மற்றும் அரசு ஊழி யர்  நகரில் கிரயம் பெற்ற முன்னாள் அரசு ஊழியர்கள் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் விஜயகார்த்திகேயனிடம் மனு அளித் தனர். இம்மனுவில், கடந்த 1995ஆம் ஆண்டு பொங்குபாளையம் ஊராட்சி யில் ஊரமைப்புத் துறை இயக்குநரகத் தில் அங்கீகாரம் பெற்ற மனைப்பிரிவு களை அரசு ஊழியர்களாக இருந்த 70க்கும் மேற்பட்டோர் விலைக்கு வாங்கி உள்ளனர். இப்போது  அவர்கள் பணி  நிறைவு பெற்றுவிட்டனர். அரசு ஊழியர் நகரில், பழைய ஆவ ணங்களை மோசடியாகப் பயன்படுத்தி, நாகரத்தினம் என்பவர் தனக்குச் சொந் தம் என நீதிமன்ற உத்தரவு பெற்றார். இதைப்  பயன்படுத்தி வேல் ஜெயக்கு மார் மற்றும் அவரைச் சார்ந்தவர்களுக் கும் இடத்தை விற்றிருக்கிறார். வேல்  ஜெயக்குமார் அந்த இடத்தைப் பெற்று அரசு ஊழியர் நகரில் அளந்து நடப் பட்ட கற்களையும் பறித்துவிட்டு ஆக்கி ரமித்துக் கொண்டார். இதுதொடர்பாக நீதிமன்றங்களில் வழக்கு நடைபெற்று, திருப்பூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் அரசு ஊழியர்களுக்கு சாதகமாக தீர்ப்பளித்தது. அத்துடன் எதிர்தரப்பி னர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களும் கடந்த 2019ஆம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டு மாவட்ட உரிமையியல் நீதிமன்றத் தீர்ப்பை உறுதிப்படுத்தி உள்ளது.

இந்நிலையில், ஜனவரி 4ஆம் தேதி மேற்படி தங்களுக்குச் சொந்தமான மனைப் பிரிவுகளை சுத்தம் செய்து எல் லைக் கற்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வேல் ஜெயக் குமார் மற்றும் அவரது ஆதரவாளர் கள், அடியாட்கள் சம்பவ இடத்துக்கு வந்து மனை  உரிமையாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன், வேலை செய்வதையும் தடுத்துவிட் டனர். இது குறித்து பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், காவல் துறையினர் பாதிக்கப்பட்ட வர்களுக்கு ஆதரவாக நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டனர். ஐ.ஜி., டிஐஜி அலுவலகங்களில் இருந்து நிர்பந்தம் வருவதாக காவல் துறையினர் கூறியுள் ளனர். மேலும் தற்போது அரசு ஊழியர் களுக்குச் சாதகமாக வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத் தில் மேல் முறையீடு செய்யப் போவதா கவும், அதுவரை இந்த மனைப் பிரிவு களில் உரிமையாளர்கள் நுழைவதை தனது அரசியல் மற்றும் காவல் துறை செல்வாக்கைப் பயன்படுத்தி தடுத்து வருவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். எனவே மாவட்ட ஆட்சியர் தங்கள் வாழ்வில் சிறுகச் சிறுக சேமித்து வாங் கிய வீட்டுமனைப் பிரிவுகளை, நீதி மன்ற தீர்ப்புப்படி தங்கள் சொந்த பயன் பாட்டுக்கும்  பயன்படுத்திக் கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட் டுக் கொண்டனர். இது குறித்து திருப்பூர்  கோட்டாட் சியர் நேரில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் உத்தர விட்டதாகவும் பாதிக்கப்பட்டோர் தெரிவித்தனர்.

;