tamilnadu

img

நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசு வழங்குவதில் தாமதம்

பொள்ளாச்சி,  ஜன. 11-  பொள்ளாச்சியில் ரேசன் கடைக ளில் பொங்கல் பரிசு வழங்குவதில் இழுபறி நீடித்து வந்ததால்,  பொது மக்கள் வெகு நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். கோவை  மாவட்டத்தில்  தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசு பொருட்களான கரும்பு, ஏலக்காய், சர்க்கரை, திராட்சை மற்றும் ரூ.1000 தொகை உள்ளிட்ட பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது.இதன் ஒரு பகுதி யாக கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதிகளில் வெள்ளியன்று பொங்கல் பரிசுகள் வழங்கப்படுவதாக அந் தந்த பகுதிகளுக்கு உட்பட்ட நியாய விலைக் கடைகளில் அறிவிக்கப்பட் டிருந்தது. இதில் நந்தனார் காலனி பகுதியில்  உள்ள நியாய விலைக் கடை யில்  குடும்ப அட்டைகளுக்கு 10 ஆம் தேதியும், 11ஆம் தேதியன்று ராம கிருஷ்ணா லே அவுட் மற்றும் கிருஷ் ணசாமி லே அவுட் பகுதிகளுக் கும், 12 ஆம் தேதியன்று பி.எம்.சி. காலனி மற்றும் ஆர்.பி.எஸ்.காலனி,  பல்லடம் ரோடு ஆகிய பகுதி களுக்கும், இறுதி நாளான 13 ஆம் தேதி யன்று விடுபட்ட குடும்ப அட்டை களுக்கும் பொங்கல் பரிசுகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டி ருந்தது.  இந்நிலையில், பொள்ளாச்சி - பல்லடம் சாலை யிலுள்ள நந்தனார் காலனி நியாய விலைக் கடை யில் காலை 8  மணிக்கு பொங்கல் பரிசுகள் வாங்க  பொதுமக்கள் கூட் டம் அலைமோதி யது. இதனிடையே காலை முதல் மதி யம் வரை குறைந்தபட்ச அளவிலேயே மிகுந்த இழுபறியுடன்  டோக்கன்கள் வழங்கப்பட்டன. இதில் சுமார் 70 டோக்கன்கள் பெற்றுக்கொண்ட பய னாளிகளுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வெள்ளியன்று வழங்கப்பட் டுள்ளது. மேலும்,  இப்பகுதியில் நந்த னார் காலனியில் மட்டுமே 600 க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைப் பயனா ளர்கள் உள்ளனர். இதில் முதல் நாளான வெள்ளி யன்று மிகவும் குறைந்த எண்ணிக்கை யிலான குடும்ப அட்டைகளுக்கு வழங் கியதால்,அதிக அளவில் குவிந்த பொதுமக்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் சென்றனர். இதில் வயதானவர்களும், பெண்களும் நீண்ட நேரம் காத்திருந் தும், பொங்கல் பரிசுப் பொருட்கள் கிடைக்காததால் மனமுடைந்து திரும் பிச் சென்றனர்.

;