tamilnadu

img

மதுரையில் இருந்து கோவைக்கு ஹெலிகாப்டரில் 30 நிமிடத்தில் கல்லீரல் வந்தது

கோவை, ஜன. 16- மதுரையிலிருந்து கோவைக்கு ஹெலி காப்டரில் 30 நிமிடத்தில் கல்லீரல் கொண்டு  வரப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 21  வயதுடைய  சரத்குமார் சாலை விபத்தில் மூளைச் சாவடைந்தார். அவரது பெற் றோர்கள் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். இந்நிலையில், கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் உள்ள  ஒரு  நோயாளிக்கு கல்லீரல் தேவைப் பட்டது. தமிழ்நாடு உறுப்பு தான ஆணை யத்தின் அனுமதியுடன் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை கல்லீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் குழு மதுரை சென்று, வேலம்மாள் மருத்துவமனை அறுவை சிகிச்சை மருத்துவர்களுடன் இணைந்து அறுவை சிகிச்சை செய்து, சரத்குமாரின் கல்லீரலை ஹெலிகாப்டர் மூலம்  30 நிமிடத்தில் கொண்டுவரப்பட்டது. இதனை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மருத்துவர் அருண் பழனிசாமி பெற்றுக்கொண்ட பின்  மருத்துவமனையில்  உள்ளவருக்கு  வெற்றி கரமாகப்  பொருத்தப்பட்டது. இதுகுறித்து, கோவை கே.எம்.சி. ஹெச்.  மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா. ஜி. பழனிசாமி கூறுகையில், இதற்கு உறு துணையாக இருந்த மதுரை மற்றும் கோவை  காவல் துறைக்கும், பிளானெட் எக்ஸ்  ஏரோஷ்பேஸ் ஹெலிகாப்டர் நிறுவனத் திற்கும், உடல் உறுப்புக்களைத் தான மாக தர முன்வந்த சரத்குமார் குடும்பத்தி னருக்கும் தனது  நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

;