tamilnadu

கோவை மற்றும் ஈரோடு முக்கிய செய்திகள்

கோவை மத்திய சிறையில்  கைதி தற்கொலை முயற்சி

கோவை, ஜூன் 19- கோவை மத்திய சிறையில் விசாரணைக் கைதி ஒருவர் கண்ணாடி துகள்களை உண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையம் பகுதியில் உள்ள சேக்கிழார் வீதியைச் சேர்ந்த துரைசாமி என்பவரின் மகன் பிரகாஷ் (57). இவர் கடந்த மார்ச் மாதம் 23 ஆம் தேதி 294 (b), 506 (1) மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலை யில் செவ்வாயன்று பிரகாஷ் சிறையில் கிடைத்த கண் ணாடித் துண்டுகளை உண்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார்.  இதுகுறித்து, தகவலறிந்த சிறைத்துறையினர் உட னடியாக அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில்  தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்ததைய டுத்து சிறைவாசிகள் சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். இதனிடையே, சிறைவாசிக்கு எப்படி கண்ணாடி துகள்கள் கிடைத்தது என சிறைத்துறை அதிகாரிகள் தீவிர விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எட்டுபேர் குண்டர் சட்டத்தில் கைது

கோவை, ஜூன் 19- முன்விரோதம் காரணமாக கோவையில் பட்டப்பகலில் இருவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 8 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறை யில் அடைக்கப்பட்டனர்.  கோவை - அவிநாசி சாலையில் கடந்த மே மாதம் 14-ம் தேதி நீதிமன்றத்தில் கையெழுத்து போட்டுவிட்டு வந்த கணபதியைச் சேர்ந்த பிரதீப், தமிழ்வாணன் ஆகிய இரண்டு பேரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்குப் பழி தீர்ப்பதற்கான செயல்களில் எதிர் தரப்பினரும் திட்ட மிட்டிருந்தனர். இதையறிந்த ரேஸ்கோர்ஸ் காவல்துறையி னர் இரு தரப்பினரையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக கைது செய்ய முடிவு செய்தனர். அதன்படி, தனபால், சஞ்சய் ஆகியோரை தவிர்த்து மணிகண்டன், சதீஷ்குமார், சூர்யா, ஜெகதீஷ், ராஜேஷ், ஹரி, ஹரிஹரன் மற்றும் தனபால் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர்.  இந்நிலையில், பட்டப்பகலில் பொதுமக்களை அச்சப்படுத்தி, நடுரோட்டில் கொடிய ஆயுதங்களுடன், கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்ட குற்றத்திற்காகவும், கொடூரமான குற்றச் செயலைத் தொடர்ந்து செய்வதைத் தடுக்கும் நோக்கத்தில் கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில், 8 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப் பட்டனர்.

அஞ்சல் காப்பீடு முகவர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை, ஜூன 19- இந்திய அஞ்சல் துறையின் கோவை கோட்டத்தில் அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு வணிகம் செய்வதற்கான நேரடி முகவர் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான தேர்வு கோட்ட முது நிலை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற உள் ளது. விருப்பமுள்ளவர்கள் வரும் ஜுலை 5ஆம் தேதிக்குள்  இரண்டு புகைப்படம், ஆதார் கார்டு நகல் 1, 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் நகல் மற்றும் பான்  கார்டு நகலுடன் கோவை தலைமை தபால் அலுவலக முக வரிக்கு விண்ணப்பிக்குமாறு முதுநிலைக் கண்காணிப் பாளர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்சான்று சமர்பிக்க ஓய்வூதியதாரர்களுக்கு கெடு

ஈரோடு, ஜூன் 19- ஈரோடு மாவட்ட கரு வூலம் மற்றும் சார்நிலை கருவூலத்தின் வாயிலாக 20,401  பேர் ஓய்வூதியம் மற் றும் குடும்ப ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இவர்களில் 18,001 ஓய்வூதி யதாரர்கள் நேர்காணல் மூலம் புதுப்பித்துள்ளனர்.  மீதமுள்ள 2400 ஓய்வூதி யதாரர்கள் தொடர்புடைய கருவூலங்களில் உயிர் சான்று சமர்ப்பித்தோ, ஜீவன்பிரமாண் திட்டத் திலோ தங்களது நேர்காண லினை ஜூன் மாதம்  30ஆம் தேதிக்குள் முடித்திட வேண்டும். தவறும் பட்சத் தில் ஓய்வூதியம் நிறுத்தப் படும் என மாவட்ட ஆட்சி யர் சி.கதிரவன் தெரிவித் துள்ளார்.

;