tamilnadu

img

குடிமங்கலம் குளத்தில் சட்ட விரோதமாக மண் எடுப்பு

உடுமலை, ஜன. 31- குடிமங்கலம் பகுதியில் அர சுக்கு சொந்தமான குளத்தில் பல அடி ஆழத்தில் கிராவல் மண் எடுத்து உள்ளது குறித்து புகார் எழுந்துள்ளது. உடுமலை வட்டம், குடிமங் கலம் ஒன்றியம், குடிமங்கலம் நால் ரோடு,  தாராபுரம் சாலையில் அரசு பள்ளிக்கு எதிரில்  அரசுக்கு சொந்தமான குளம் உள்ளது. இந் தக் குளத்தில் கரைக்கு அருகில் சுமார் பத்து அடி ஆழத்தில் மண்னை எடுத்துள்ளனர். இத னால் இப்பகுதியின் நீர் வளம் கேள்விக்குறியாகி உள்ளது. இது குறித்து சமுக ஆர்வலர்கள் கூறுகையில், பொது மக்கள்  தங் களின் வீட்டு தேவைகளுக்கு என்று மண் எடுக்க வருவாய் துறை யில் அனுமதி கேட்டால் தருவது இல்லை. ஆனால் கடந்த சில நாட் களாக குடிமங்கலத்தில் போக்கு வரத்து அதிகமாகவும், பொது மக்கள் நிறைந்தும் உள்ள பகுதி யில் கனரக இயந்திரங்களை கொண்டு பல ஆயிரம் லோடு கிராவல் மண் எடுத்துச் சென்றது அனைவருக்கும் பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த குளத்தில்தான் கடந்த சில மாதங் களுக்கு முன்பு  ஊராட்சி ஒன்றி யத்தின் சார்பில் ரூ.1லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் குடிமராமத்து பணி மூலம் தூர் வாரப்பட்டதாக தகவல் பலகை வைக்கப்பட்டுள் ளது. இந்நிலையில் மீண்டும் நிலத் தடி நீர் பாதிக்கும் வகையில் சட்ட விரோதமாக வண்டல் மண் எடுத் துள்ளனர். இதற்குத் துணை போன அனைத்து அதிகாரிகள் மீதும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இது குறித்து கோட்டாட்சியர் ரவிக்குமாரிடம் கேட்ட போது, மண் எடுத்து உள்ளதாக தகவல் கிடைத்து உள்ளது. குளத்தை ஆய்வு செய்த பின்பு தான் நடவ டிக்கை எடுப்பதாக கூறினார்.  உடுமலை வட்டாட்சியர் தயா னந்தனிடம் கேட்ட போது, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் இப்பகுதியில் சாலை பணிகளை மேற்கொள்ள அரசு மற்றும் தனியார் நிலங்களில் நீர் வளத்தை அதிகப்படுத்தும் வகையில் புதிதாக பண்ணை குட்டை அமைத்தல் மற்றும் பழைய குளங்களை ஆழப்படுத் தும் வகையில் மண் எடுக்க அரசு வழங்கிய அனுமதியின் அடிப்படையில் மண் எடுப்ப தாகவும், ஆனால் தற்போது வரை முறையான அரசு உத்தரவு வழங் காத காரணத்தால் மண் எடுப் பதை நிறுத்தியுள்ளோம் என்றார்.  குடிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரொனால்ட் ஷெல்டன் பெர்னாடஸிடம் கேட்ட போது, இது குடிமங்கலம் ஊராட்சிக்கு சொந்தமான குளம் தான். இங்கு ஏற்கனவே குடிமராமரத்து வேலைகள் செய்து உள்ளோம். ஆனால் தற்போது மாவட்ட நிர் வாகத்தின் உத்திரவின் பெயரில் மண் எடுப்பதாகத் தகவல் கிடைத் தது. ஆனால் தற்போது மண் எடுப்பதை நிறுத்தியுள்ளார்கள் என்றார்.  (ந.நி)

;