tamilnadu

கோவையில் வெப்பத்தை தணித்த மழை

கோவை, ஜூலை 27- கோவையில் பல்வேறு இடங்களில் பெய்த மழை யால் குளிர்ச்சியான காலநிலை நிலவியது. கேரளத்தில் ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கிய நிலையில் அடுத்த சில நாட்களி லேயே தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியது. குறிப்பாக கோவை, நீலகிரி உள்பட மேற்குத்தொடா்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை அவ்வப் போது பெய்து வருகிறது.

இந்நிலையில், கோவையில் துடியலூர், கவுண் டம்பாளையம், ஜி.என் மில்ஸ் உள்ளிட்ட இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய் தது. இதனால் கோவை மாவட்டத்தில் வெப்பம் தணிந்து  குளிர்ச்சியான சூழல் நிலவியது.

;