tamilnadu

img

சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம்

அவிநாசி, செப்.16- வாழ்வாதாரம் கேள்விக்குரியாக்கும் விதமாக தமிழக அரசு ஆணை வெளியிட்டதை எதிர்த்து திருப்பூரில் திங்களன்று சுகாதார ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுகாதார ஆய்வாளர்களின் பதவி உயர்வு, பணி இடங் கள், வாழ்வாதாரம் கேள்விக்குரியாக்கும் விதமாக தமிழக  அரசு 337, 338 ஆகிய அரசாணைகளை வெளியிட்டுள்ளது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சுகாதார ஆய்வாளர் கள் சங்கத்தினர் கடந்த செப்.4 முதல் செப்.10ஆம் தேதி வரை  கருப்பு சட்டை அணிந்து பணியாற்றினர்.  இதைத்தொடர்ந்து, திங்களன்று மாலை திருப்பூர் மாவட்ட துணை இயக்குநர் அலுவலகம் முன் சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கோ.சிவக்குமார் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் பி.ராஜி,  மாவட்ட செயலாளர் எம்.பொன்னாண் டவர் ஆகியோர் விளக்கவுரையாற்றினார். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.பாஸ்கரன், சேவூர் சுகாதார ஆய்வாளர் ரமேஷ், பொது சுகாதாரத்துறை மாவட்ட இணை செயலாளர் யோகானந்தம், வட்டார சுகாதார மேற்பார்வை யாளர் ஜோசப் பெர்னாடஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி னர். பொருளாளர் சௌந்தர பாண்டியன் நன்றி கூறினார்.

;