சேலம், ஆக.16- சேலம் இரும்பாலையை தனியார்மயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம சபை கூட் டத்தில் தீர்மானம் நிறை வேற்ற பொதுமக்கள் வலியு றுத்தினர். ஆனால் அதி காரிகள் மறுப்பு தெரிவித்த தால் அங்கு பரபரப்பு ஏற் பட்டது. சேலம் மாவட்டம், வீர பாண்டி ஒன்றியம் சித்தர் கோவில் அருகே ஆரிய கவுண்டம்பட்டி ஊராட்சி பகுதியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டம் வீரபாண்டி தோட்டக்கலை உதவி அலுவலர் மாரியப்பன், ஊராட்சி செயலாளர் பரமசிவம் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சேலம் உருக்காலைக்கு நிலம் கொடுத்தவர்கள், சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கு வதை கைவிடக்கோரி கிராம சபைக் கூட்ட பதிவேட்டில் கோரிக்கையாக பதிவு செய்யு மாறு வலியுறுத்தினர். ஆனால் அதிகாரிகள் ஏற்க முடியாது என்று கூறியுள்ளனர். இத னால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதன்பின் அதிகாரிகளுக்கு தொலை பேசி மூலம் ஆலோசனை பெற்றனர். இதை யடுத்து பொதுமக்களிடம் இரும்பாலை தனியார்மயத்தை கைவிடக்கோரிய தனி மனுவாக பெற்றனர். இதனால் கூட்டத்தில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.