tamilnadu

கேரளத்தில் 1,908 பேருக்கு கோவிட் ஒரே நாளில் குணமடைந்தது 1,110 பேர்

திருவனந்தபுரம், ஆக.24- கேரளத்தில் ஞாயிறன்று 1908 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டது. 1110 பேர் குண மடைந்தனர். கோவிட்டில் 5 பேர் மரணம டைந்தனர். இதுவரை மாநிலம் முழுவதும் மொத்தம் 223 கோவிட் மரணங்கள் நடந்துள்ளன. கோவிட் நோய் ஞாயிறன்று கண்டறியப் பட்டதில் 35 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 105 பேர் மற்ற மாநிலங்களில் இருந்தும் வந்த வர்கள். 1718 பேருக்கு தொடர்பு மூலம் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் நோய் தொற்றிடம் தெரியாதோர் 160 பேர். 50 சுகா தாரத்துறை ஊழியர்களுக்கு தொற்று உறுதியா னது. 20,330 பேருக்கு கோவிட் உறுதி செய்யப் பட்டு தற்போது சிகிச்சையில் உள்ளனர். இதுவரை மொத்தம் 37,649 பேர் குணமடைந்துள்ளனர்.     மாநிலம் முழுவதும் தற்போது 1,82,525 பேர் தற்போது கண்காணிப்பில் உள்ளனர். இதில் 1,65,996 பேர் வீடுகள்/ நிறுவனங்களில் உள்ளனர். 16,529 பேர் மருத்துவமனைகளில் உள்ளனர். ஞாயிறன்று மட்டும் 2066 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். கடந்த 24 மணி நேரத்தில் 36,353 மாதிரிகள் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. முன்னுரிமை பிரிவினர் உட்பட இதுவரை மொத்தம் 14,22,558 மாதிரிகள் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. முன்னுரிமை பிரி வினரின் 1,63,554 மாதிரிகளும் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 23 ஹாட் ஸ்பாட்டுகள் ஞாயிறன்று உருவா யின. 17 பகுதிகள் ஹாட் ஸ்பாட்டிலிருந்து விலக்கு பெற்றன. தற்போது மொத்தம் 622 ஹாட் ஸ்பாட்டுகள் மாநிலம் முழுவதும் உள்ளன.