tamilnadu

img

ஏழாவது ஊதிய குழு பரிந்துரைத்த சம்பளத்தை வழங்கிடுக

நாமக்கல், ஏப்.2- ஏழாவது ஊதிய குழு பரிந்துரைத்த சம்பளம் மற்றும் அரியர்ஸ் பிரதி மாதம் 1 ஆம் தேதி முதல் 7ஆம்தேதிக்குள் மாதமாதம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஊரகவளர்ச்சி ஊராட்சித் துறை ஊழியர் சங்க (சிஐடியு) சார்பில் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.நாமக்கல் மாவட்டத்தில் 15 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் பணிபுரிந்து வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு ஏழாவது ஊதிய குழு சிபாரிசு அடிப்படையில் ஊதியம் மற்றும் அரியர்ஸ் பிரதி மாதம் 1 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதிக்குள் மாதமாதம் வழங்க வேண்டும். ஒரு சில ஊராட்சி ஒன்றியங்களில் அரியர்ஸ் தொகை பாதி அளவில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. பெருவாரியான ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் சம்பளம் மற்றும் அரிய தொகையைமுழுமையாக வழங்க வேண்டும்என்பன உள்ளிட்ட பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாயன்று ஊரக வளர்ச்சி ஊராட்சித் துறை ஊழியர் சங்க (சிஐடியு) சார்பில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வளர்ச்சிப் பிரிவு அலுவலர் ஷசினபேகத்திடம் மனு அளித்தனர்.இதில், சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி.கண்ணன், சிஐடியுமாவட்ட செயலாளர் ந.வேலுசாமி, மாவட்ட உதவிச் செயலாளர் கு.சிவராஜ், மற்றும் ஆர்.தங்கவேல், பி.கிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

;