tamilnadu

img

குறுந்தொழிலை பாதுகாக்க ஜிஎஸ்டி வரி விதிகளை தளர்த்திடுக காட்மா சங்கத்தினர் மனு

கோவை, டிச.31 –  குறுந்தொழில்களை பாது காக்க ஜிஎஸ்டி வரிவிதிப்பில் தளர்வு வேண்டும் என காட்மா சங்கத்தினர் ஜிஎஸ்டி ஆணை யரிடம் மனு அளித்தனர். கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரக தொழில் முனைவோர் சங்கத்தின் மாவட்ட தலைவர்  சி.சிவக்குமார் தலைமையில் இணைத் தலைவர் ஜே.மகேஸ்வரன்,பொதுச்செய லாளர் ஜி.செல்வராஜ்,  பொருளா ளர் ஜி.நடராஜன் உள்ளிட்ட நிர் வாகிகள் ஜிஎஸ்டி  மற்றும் மத்திய கலால் வரித்துறை முதன்மை ஆணையர் ராஜேஷ் சோதியை சந்தித்து மனு அளித்தனர். இம் மனுவில் கூறியிருப்பதாவது, 2017 ஜூலை 1 ஆம்   தேதி முதல் மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை அமல்ப டுத்தி வருகிறது. இதில் இன்ஜி னியரிங் சம்பந்தமான உதிரிபா கங்களை பெரிய நிறுவனங்களி டமிருந்து ஜாப் ஆடர்களாகவும்,  உற்பத்தி மற்றும் விற்பனை ஆர்டர்களாகவும் பெற்று இயங்கி வரும் குறுந்தொழில் கூடங்கள் கோவை மாநகரில் 50 ஆயி ரத்துக்கும் மேல் உள்ளன. இந்த குறுந்தொழில் கூடங்க ளுக்கு 18 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. இதிலிருந்து ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டுமென்று காட்மா சங்கம் உட்பட பல்வேறு குறுந்தொழில் சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து போராட்டங்கள் நடத் தின.  இதனைத்தொடர்ந்து மத்திய அரசு 2019 செப்டம்பரில் ஜாப் ஆர்டர்களுக்கான ஜிஎஸ்டி வரி 18  சதவிகிதத்திலிருந்து 12 சதவிகித மாக குறைக்கப்படும் என்று அறி வித்தது. இந்நிலையில் பொருளா தார மந்தநிலை மற்றும் நிதி நெருக்கடி ஆகிய காரணங்களைக் கூறி,குறுந்தொழில் முனை வோருக்கு ஆர்டர்கள் கொடுக்கும் பெரிய நிறுவனங்கள், நாங்கள் செய்து கொடுத்த வேலைகளுக் கான தொகையை கொடுப்பதற்கு 120 முதல் 150 நாட்களுக்கு மேல் எடுத்துக் கொள்கிறார்கள்.இத னால் குறுந்தொழில்முனைவோர் கள் ஜிஎஸ்டி தொகையைக் கட்டு வதற்கு காலதாமதம் ஆகிறது.  எனவே, தனியார் மற்றும் மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்கள் சிறு,குறு தொழில் நிறுவனங்களுக்கு  வழங்க வேண்டிய பில் தொகையை  பில் தேதியிலிருந்து 45 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்த வேண்டும்.  தற்போது  ஊடகங்களில் ஜிஎஸ்டி தொகையை சரியாக செலுத்தாத தொழில்முனைவோரின் வங்கி கணக்குகள் முடக்கப்படும் என்றும் அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் செய் திகள் தொடர்ந்து வெளிவரு கின்றன.இச்செய்திகள் நடை முறைக்கு வந்தால்  தொழில்முனை வோர் தங்களது தொழிலை தொடர்ந்து செய்ய இயலாத நிலை ஏற்படும்.  ஏனென்றால் தற்போது தொழில் முனைவோர்கள் தங்க ளது பில் தொகை மற்றும் பேமெண்ட் பரிவர்த்தனைகளை வங்கிகள் வழியாக காசோலை கள் மற்றும் ஐபிஎஸ் மூலமாகவே செய்து வருகின்றனர். இந்த நிலை யில் வங்கி கணக்கு முடக்கப் பட்டால், வங்கி பரிவர்த்தனைகள் செய்ய முடியாமல் தொழில் முனை வோர் தங்களது தொழிலை தொடர்ந்து நடத்த இயலாத நிலை உண்டாகும்.எனவே, தொழில் முனைவோர்களை பாதிக்கும் இந்த வகையான நடவடிக்கை களை  கைவிட வேண்டும் என்று அம்மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;