அவிநாசி, ஆக்.9- அவிநாசி அருகே திருமுருகன் பூண்டியில் உள்ள பாத்திரக்கடையில் புதனன்று தீ விபத்தில் பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. அவிநாசி ஒன்றியம், திருமுருகன்பூண்டி பேரூ ராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையம் அருகில் ராம்தேவ் மெட்டல் என்ற பாத்திரக்கடை பல வருடங் களாக செயல்பட்டு வருகிறது. இக்கடையில் புதனன்று அதிகாலை நேரத்தில் கட்டிடத்தின் மேல் தளத்தில் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனைக் கண்ட அருகில் உள்ள பொதுமக்கள் கடை உரிமையாளர், தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து தீய ணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் சில்வர் பாத்திரம், பிளாஸ்டிக் பொருட்கள், படுக்கைகள் உள்ளிட்டவை தீயில் கருகி சேதமாகின. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.