“சமூக நீதியை அடைய சமத் துவமின்மை இடைவெளிகளை மூடுவது” – ஐக்கிய நாடுகள் சபை, அனைத்துலக சமூக நீதி நாள் (பிப் 20) அறைகூவல் இது. சமத்துவமின்மை. குழந்தை கருவில் வளரும் போதே தொடங்கி விடுகிறது. கருவுற்ற ஏழைத் தாய் மார்களின் குழந்தைகள் பெரும் பாலும் போதுமான வளர்ச்சி யின்றிப் பிறக்கின்றன. பிறப்பில் தொடங்கும் சமத்துவமின்மை இறப்பு வரை நீடிக்கிறது. உணவு, உடை, உறைவிடம், கல்வி, சுகா தாரம், மருத்துவம், வேலை வாய்ப்பு, மனித உறவு, நீதி பெறு தல் எல்லாவற்றிலும் சமத்துவ மின்மை விரிவடைந்து கொண்டே வருகிறது. சமத்துவமின்மையைக் குறைப்பதில் கல்வியளித்தல் மற் றும் வேலையளித்தல் ஆகிய இரண்டின் பங்கும் முதன்மையா னது. எனவே ஒரு அரசு இவ்வி ரண்டு வாய்ப்புகளையும் உரு வாக்குவதில் முக்கியக் கடமை யாற்ற வேண்டும். இதற்காகத் தான் இந்தியாவில் கல்வி, வேலை வாய்ப்பு இரண்டிலும் இட ஒதுக் கீடு என்ற சமூகநீதி அரசியல் அமைப்புச் சட்டத்தால் உருவாக் கப்பட்டது. ஆனால் சமூக நீதியைப் பெறு வதில் இன்றைக்கும் பல தடை கள் இருக்கின்றன. ஈரோடு மாவட் டம், அந்தியூர் ஒன்றியம், பர்கூர் மலைக் கிராமம் கொங்காடை யைச் சேர்ந்த பழங்குடி மாணவர் உ.சந்திரனுக்கு உரிய சமூக நீதி கிடைக்காததால் அவருடைய உயர்கல்வி வாய்ப்பு கேள்விக் குறியாக இருக்கிறது. கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி யில் சந்திரன் கடந்த ஆண்டு மேல் நிலைக் கல்விப் படிப்பில் வேளாண்மைச் செயல்பாடுகள் தொழிற்பாடப்பிரிவில் படித்து 600 க்கு 444 மதிப்பெண்கள் பெற் றுத் தேர்ச்சி பெற்றார். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் இளம் அறி வியல் வேளாண்மைப் பட்டப் படிப்பிற்கும் தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகத் தில் கால்நடை மருத்துவப் படிப் புக்கும் விண்ணப்பித்தார். இப் படிப்புகளுக்கு முதன்முதலாக விண்ணப்பித்த இவருடைய கிரா மத்தின் முதல் தலைமுறை மாண வரே இவர் தான். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழத்தில் பட்டப்படிப் புகளுக்கான மாணவர் சேர்க்கை யில் மேல்நிலைக் கல்வியில் தொழிற்பாடப் பிரிவில் படித்த மாணவர்களுக்கு 5 சதவிகித இடங்கள் மட்டும் அனுமதிக்கப் பட்டதாலும் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படாததாலும், தனியார் வேளாண்மைக் கல்லூரிகளில் இடமளிக்காததாலும் சந்திரனுக்கு வேளாண்மைப் பட்டப்படிப்பில் சேர்வதற்கு இடம் கிடைக்க வில்லை. தமிழ்நாடு கால்நடை மருத் துவப் பல்கலைக் கழகத்தின் மேல்நிலைக் கல்வி தொழிற்பாடப் பிரிவு மாணவர்களின் தரவரிசைப் பட்டியலில் பழங்குடிப் பிரிவு மாணவர்களில் சந்திரன் முதலாவ தாக இருந்தார். ஆனால், கால் நடை மருத்துவப் படிப்பு சேர்க்கை யிலும் மேல்நிலைக் கல்வி தொழிற்பாட மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் 5 சதவிகித இடங்க ளில் பழங்குடிப் பிரிவினருக்கான 1 சதவிகித இட ஒதுக்கீட்டில் சந்திர னுக்கு இடம் கிடைக்கவில்லை. சந்திரன் கால்நடை மருத்து வப் படிப்பில் சேர்க்கை வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசிற் கும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கும் வேண்டுதல் கடிதம் அனுப்பினார். சென்னை உயர்நீதி மன்றத்திலும் தொண்டு நிறுவன உதவியுடன் வழக்குத் தொடர்ந்தார். தேசிய மனித உரிமைகள் ஆணையம் சந்திரனுக்கு இடம் அளிக்க கருணை அடிப்படையில் பரிசீலிக்கும்படி கால்நடை மருத்து வப் பல்கலைக்கழகத்தின் பதிவா ளருக்கு அறிவுறுத்தியது. ஆனால் இது வரை பல்கலைக் கழகம் சேர்க்கை வழங்கவில்லை. சென்னை உயர்நீதி மன்றத்தில் பல்கலைக் கழகம் பதிலளிக்க காலதாமதம் ஆனதால் இன்னும் இறுதித் தீர்ப்பு கிடைக்கவில்லை. சமூக நீதி கிடைக்காமல் பாதிக்கப்பட்டவர்கள் நீதி பெறும் முறைகளிலும் குறைபாடுகள் இன்றைக்கும் இருப்பதையே இது காட்டுகிறது. சட்டம் உறுதி செய்துள்ள சமூகநீதி கிடைக்கா மல் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமூக நீதி வழங்குவதில் உள்ள தடைகள் மற்றும் அக்கறையின் மைகள் கலையப்படவேண்டும். உலக சமூக நீதி நாளில் இதற் கான உறுதி கொள்வோம்.