tamilnadu

img

கரும்பு விற்பனை இல்லாமல் விவசாயிகள் வேதனை

இளம்பிள்ளை, ஜன. 14- சேலம் மாவட்டம் அருகே உள்ள சித்தர்மலை பகுதியில் கரும்பு விற்பனை இல்லாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் இளம்பிள்ளை  அருகே உள்ள கஞ்சமலை சித்தர்  கோவில் அடிவாரம் இலகுவம்பட்டி பகுதியில் விவசாயிகள் கரும்பு அதிக  அளவில் பயிரிட்டு உள்ளனர். இந்த  கரும்புகள்  நல்ல விளைச்சல் உள் ளது. ஆனால் தைப்பொங்கலை முன்னிட்டு மெத்த வியாபாரிகள்  யாரும்வராததால் விவசாயிகள் மிகுந்த  கவலையுடன் சில்லறை விலையில் நஷ்டத்தில் விற்பனை செய்து வரு கின்றனர். மேலும் தமிழக அரசு ஆண்டு  தோறும் தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து ரேஷன் குடும்ப அட்டைதா ரர்களுக்கு கரும்பு வழங்குவதற்காக  அந்தந்த ஊர்களில் உள்ள கரும்பு களை விலைக்கு வாங்கி வந்தனர்.  ஆனால் இந்த ஆண்டு கரும்பை ஒரு  குறிப்பிட்ட  இடத்தில் மட்டும் வாங்கி விட்டதால் இவர்களின் கரும்பு விற் பனை செய்ய முடியாமல் தவித்து  வருகின்றனர். மேலும், வியாபாரிகளும் கர்நாட காவுக்கு பொங்கலை முன்னிட்டு  கரும்பு வாங்க வருவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு  வியாபாரிகள் யாரும் வராததால் விவசாயிகள் தங் களது காட்டிலேயே கேட்கும் நபர்க ளுக்கு ஒரு தட்டு கரும்பு 20 முதல் 30 வரை பெரும் நஷ்டத்தில்  விற்கப்படு வதாக  கவலையுடன் தெரிவிக்கின்ற னர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில் இந்த ஆண்டு கரும்பு நல்ல விலைக்கு விற்கும் என நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம், ஆனால் வியாபாரிகளும் அரசு தரப் பில் யாரும் இந்த கரும்பை வாங்க வராததால் பெரும்நஷ்டத்தில் விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளதாக வேதனையோடு தெரிவித்தனர்.

;