தருமபுரி மாவட்டத்தின் பிரதான தொழிலாக விவசாயம் மட்டுமே இருந்து வருகிறது. மாவட்டத்தில் மொத்த சிறு, குறு விவசாயிகள் எண்ணிக்கை 1,90,000 பேர் ஆவர்.70 விழுக் காடு மக்கள், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களையே தங்கள் வாழ்வாதாரமாக கொண் டுள்ளனர். இம்மாவட்டத்தில் பெரும் பாலும் இராகி மற்றும் பயறுவகை பயிர்கள் மானாவாரி நிலங்களில் பயிரிடுகின்றனர். ஒரு பகுதியில் கரும்பு, மா, பலா, மஞ்சள், பருத்தி, மரவள்ளி கிழங்கு, வாழை, தக்காளி, காய்வகைளான கத்திரி, முள்ளங்கி, அவரக்காய், கீரைவகைகள் ஆகி யவை பயிரிடுப்படுகின்றன. இங்கு விளைவிக்கப்படும் பொருட் கள் வெளி மாவட்டங்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் வியாபா ரிகள் மூலம் கொண்டு செல்லப்ப டுகிறது. ஆனால், தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட போக்குவரத்து முடக்கத் தால் காய்கறி,பழங்கள் ஆகிய விவசாய விளைபொருட்களுக்கு விலை இல்லாமல் விவசாய தோட் டத்திலேயே அறுவடைசெய்யாமல் காய்கள், பழங்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
கண்ணீர் வடிக்கும் தக்காளி விவசாயிகள்
தருமபுரி மாவட்டம், பாலக் கோடு சுற்றுவட்டார பகுதிகளான, மாரண்டஅள்ளி, பஞ்சபள்ளிபாளை யம், சாமனூர், காடுசெட்டிபட்டி உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் விவசாயிகள் அதி களவில் தக்காளி சாகுபடியில் ஈடு பட்டுள்ளனர். கடுமையான வறட்சி நிலவி வரும் இந்த சமயத்தில் தண்ணீர் பிரச்சனையை சமாளித்து தக்காளியை விளைவித்த நேரத்தில், விளைந்த தக்காளிக்கு உரிய விலை கிடைக்காமல் போனதால், சாகுபடி செய்த முதலீட்டை எடுக்க முடியா மல் பெரும் இழப்பை சந்தித்து வரு கின்றனர். இதுகுறித்து பஞ்சப்பள்ளியைச் சேர்ந்த விவசாயி முருகேசன் கூறு கையில், விளைந்த தக்காளிய கிடைக்கின்ற விலைக்காவது விற் கலானு நினைக்கிறோம். ஆனா வியாபாரிங்க கிலோ 3 ரூபாயுக்கு கேட்குறாங்க. இதுல, அறுவடை செய்யுற கூலி கூட வருவதில்லை. தொடர்ந்து இப்படியே இருந்தா நாங்க எப்படி வாழ்வது என வேதனை தெரிவித்தனர். பாப்பிரெட்பட்டி வட்டம் துரிஞ் சிப்பட்டியைச் சேர்ந்த விவசாயி சாஸ்திரி கூறுகையில், எனக்கு சொந்தமாக 2 ஏக்கர் நிலம் உள்ளது. அதில், முழுமையா தக்காளி சாகுபடி செஞ்சேன். ரூ.1 லட்சம் செலவு செய்து, தக்காளி விளைவிச்சேன். ஆனா வாங்க ஆளு இல்லாமா செடியிலேயே அழுகுது. பெரும் முத லாளிகளுக்கும் மட்டும் கோடிக் கணக்கான ரூபாய் நிவாரணம் கொடுக்கிற அரசாங்கம் எங்கள யையும் கவனிச்ச நல்லா இருக்கும் என வேதனையோடு தெரிவித்தார்.
விணான பலாப்பழங்கள்
தருமபுரி மாவட்டத்தில் சாம னூர், அத்திமுட்லு, பன்னிபட்டி, புதுப்பேட்டை, பஞ்சப்பள்ளி, கும் மனூர், பபடகாண்ட அள்ளி, உள் ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பாக்கு மற்றும் தென்னந்தோப் புகளில் இடை இடையே ஊடு பயிராக பலா மரங்களை விவசா யிகள் வளர்த்து வருகின்றனர். இது குறித்து சானூரைச்சேர்ந்த விவசாயி சென்னப்பன் கூறுகையில், பலா மரங்களில் தற்போது கொத்து கொத்தாக பலா பழங்கள் விளைச் சலுக்கு வந்துள்ளது. கொரோனா ஊரடங்கு உத்தரவால், சரியான போக்குவரத்து வசதி கிடைக்கா மலும், அறுவடை செய்ய கூலி ஆட் கள் கிடைக்காமலும், விளைந்த பலாப்பழங்களை உரிய பருவத்தில் விற்பனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. வெளி சந்தைக ளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதில் சிரமம் நீடிப்பதால், அருகிலுள்ள மாரண்ட அள்ளிக்கு இரு சக்கர வாகனம் உள்ளிட்ட வாக னங்களில் கொண்டு சென்று கிடைக்கின்ற விலைக்கு பழங் களை தற்போது விற்பனை செய்து வருவதாகவும், விவசாய விளை பொருட்களால் இழப்பை சந்திக்கும் விவசாயிகளுக்கு ஏதாவது ஒரு வகையில் தமிழக அரசு நிவாரண உதவி செய்ய வேண்டும் என கோரிக்கைகளை விடுத்துள்ளார்.
சாலையில் கொட்டப்படும் பூக்கள்
தருமபுரி மாவட்டத்தில் சாமந்தி, குண்டுமல்லி, முல்லை, கணகாம் பரம், அரளி சம்மங்கி ஆகிய பூக் கள் அதிக அளவில் உற்பத்தி செய் யப்படுகிறது. குறிப்பாக அதகபாடி, பாலக்கோடு, வெள்ளோளை, மாரண்டஹள்ளி, பஞ்சம்பள்ளி, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் உள்ளிட்ட மாவட்டம் முழு வதும் பரவலாக சம்பங்கி பூ சாகு படி அதிகளவு விவசாயம் செய்து வருகின்றனர். அறுவடை செய் யப்படும் பூக்களை கர்நாடகா, ஆந் திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய் கின்றனர். கொரோனா தொற்றின் தாக்கம் காரணமாக, கடந்த 2 மாதத்துக்கும் மேலாக ஊரடங்கு தடை உத்தரவு நீடித்து வருகிறது. இதனால் சுபகாரியங்கள், விசே ஷங்கள், திருமண நிகழ்ச்சிகள் என மக்கள் செல்லமுடியாமல் வீட்டி லேயே முடங்கிக் கிடக்கின்றனர். இதேபோல் கோவில்கள், பூச்சந் தைகள், கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால் தோட்டத்தில் அறு வடை செய்ய முடியாமல் சம்பங்கி பூ சந்தைப்படுத்த முடியாமல் தோட்டத்திலேயே கருகி அழிந்து வருகின்றன. இந்நிலையில் தோட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட சம்பங்கி பூவை வெளிமாவட்டங்களுக்கும், வெளி மாநிலத்துக்கும் கொண்டு செல்லமுடியாமல் உள்ளூர் மார்க் கெட்டில் கொண்டுவந்து விற்பனை செய்கின்றனர். ஆனால், கிலோ 10 ரூபாய்க்கு கூட விலைபோகததால் கவலையடைந்த விவசாயிகள் வாகனங்களில் கொண்டுவந்து சோகத்தூர் அருகே சாலைகளின் ஓரம் பூக்களை கொட்டி செல்கின் றனர். அவ்வாறு கொட்டப்படும் பூக்களை கால்நடைகளுக்கு தீவ னமாக எடுத்துச் செல்லும் அவலம் உள்ளது.
ரூ.2க்கு ஒரு கிலோ முள்ளங்கி
காரிமங்கலம் மற்றும் சுற்றுவட் டாரப் பகுதிகளில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. காரி மங்கலம் அடுத்த சின்னமிட்ட அள்ளி, பெரியமிட்ட அள்ளி, திண் டல், மணிகட்டியூர், எழுமிச்சனள்ளி மற்றும் பல்வேறு பகுதிகளில் முள்ளங்கி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு வாரங் களாக முள்ளங்கி 1 கிலோ 4 வரை விவசாயிகளிடம் நேரடி கொள்முதல் செய்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக முள்ளங்கி ரூபாய் 2க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் விசாயி கள் பாதிப்படைந்துள்ளனர்.
பெரும் நஷ்டத்தில் வாழை
பாப்பிரெட்பட்டி, அரூர் பகுதி யில் வாழை சாகுபடி செய்யப்ப டுகிறது. பூவன், கற்பூரவாழை, செவ் வாழை ஆகிய வகைவாழை பயிரிடப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு ஒரு லட்சம் வரை பராமரிப்பு செலவு செய்து சாகுபடி செய்து வருகின்ற னர். இதில் அறுவடை செய்யப் படும் வாழை திருச்சி, சென்னை, பெங்களூர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும். தற்போதுள்ள சூழ்நிலை யில் உள்ளூரில் உள்ள வியாபாரி கள் குறைந்து விலைக்கே எடுத்து செல்கின்றனர். இதனால் பெரும் நஷடம் ஏற்பட்டுள்ளதாக விவசா யிகள் தெரிவித்தனர்.
மீளமுடியாத துயரத்தில் விவசாயிகள்
இதுகுறித்து தமிழ்நாடு விவசா யிகள் சங்க மாவட்ட செயலாளர் சோ.அருச்சுணன் கூறுகையில், தருமபுரி மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் அதிக அளவில் உள் ளனர். தொடர்ந்து வறட்சி நிலவி வந்த சூழலில் கடந்த ஆண்டு பெய்த சிறு மழையால் கடன் வாங்கி சாகுபடி செய்தனர். தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு எதி ரொலியால் ஏற்பட்ட போக்குவரத்து முடக்கம், விளைந்த பொருட்களை சந்தைப்படுத்த முடியாமல் பெரும் நஷ்டம் ஏற்பட்டு விவசாயிகள் மீள முடியாத துயரத்தில் உள்ளனர். எனவே இவர்களின் வாழ்வாதா ரத்தையும் எதிர்கால நலனையும் கணக்கில் கொண்டு உயர்நீதிமன்ற உத்திரவின்படி நிவாரணம் வழங்க வேண்டும். குறிப்பாக சிறு, குறு விவசா யிகளுக்கு அரசு மாதம் ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும். விவசாயிகள் வாங்கிய கடனை ஒரு வருடத்திற்க்கு வசூலிக்கக் கூடாது. சாகுபடிசெய்ய விவசாயிகளுக்கு மீண்டும் கடன் வழங்க வேண்டும் விளைபொருட்களுக்கு கட்டுப்ப டியான விலை கிடைக்க அரசு நட வடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தார்.
- ஜி.லெனின்.