சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க விவசாய கூட்டமைப்பு வலியுறுத்தல்
திருப்பூர், பிப். 6 – திருப்பூர் அருகே பூமலூர் வலையபாளையத்தில் தனது நிலத்திற்கு குறைவான இழப்பீடு வழங்கியதற்கு எதிர்ப்புத் தெரி வித்த சந்தை மதிப்பில் உரிய இழப் பீடு கோரிய விவசாயி வேலுச் சாமியை காவல் துறையினர் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், பூமலூர் ஊராட்சி வலை யபாளையத்தில் பவர்கிரிட் நிறு வனத்தினர் உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு நில அளவை உள் ளிட்ட பணிகளை விவசாயிகளின் எதிர்ப்பை மீறிச் செய்து வருகின் றனர். குறிப்பாக, புகளூர் முதல் அர சூர் வரையிலான 400 கிலோவாட் உயர் மின் கோபுர மின்தடம் அமைக்கும் திட்டம் செயல்படுத் தப்படுகிறது. இதில் வலைய பாளையம் கிராமத்தில் வேலுச் சாமி என்பவரது தோட்டத்தில் வியாழனன்று பவர்கிரிட் நிறு வனத்தினர், 100க்கும் மேற்பட்ட காவலர்கள், வருவாய் துறையின ருடன் இணைந்து இழப்பீடு வழங்கி வேலையைத் தொடக்க வந்தனர். ஆனால் விவசாயி வேலு சாமி சந்தை மதிப்பில் இழப்பீடு நிர் ணயம் செய்யாமல் வழிகாட்டி மதிப்பில் இழப்பீடு நிர்ணயம் செய்து கொடுப்பதை ஏற்க முடி யாது என்று கூறினார். சந்தை மதிப்பில் இழப்பீடு கொடுத்தால் தான் தனது நிலத்தை விடுவேன் எனக்கூறி அறவழியில் மறியலில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த அதிகாரிகள் நில அளவைக் கரு வியை வேலுச்சாமி உடைத்ததாக பொய் வழக்குப்பதிவு செய்து அவரை காவல் துறையினர் கைது செய்தனர். இது விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
விவசாய சங்க கூட்டமைப்பு எதிர்ப்பு
ஏற்கெனவே 2013ஆம் ஆண்டு புதிய நில எடுப்புச் சட்டம் பிரிவு 26ன் படி சந்தை மதிப்பில் இழப் பீடு நிர்ணயித்து கொடுக்க மாவட்ட ஆட்சியருக்கு முழு அதி காரம் உள்ளது. ஆனால் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அவ்வாறு செய்யாமல் வழிகாட்டி மதிப்பை எடுத்துக் கொண்டு இழப்பீடு நிர்ணயித்துள்ளது விவசாயிகளை வஞ்சிக்கக்கூடியதாக உள்ளது என்று உயர்மின் கோபுர எதிர்ப்பு விவசாய சங்கங்களின் கூட்டியக் கத்தினர் குற்றஞ்சாட்டினர். பாதிக்கப்பட்ட உழவர்களின் நிலைமையை மாவட்ட ஆட்சி யரும், மத்திய, மாநில அரசுகளும் உணர்ந்து அவர்களுக்கு முதலில் சந்தை மதிப்பை நிர்ணயம் செய்த பின்புதான் இழப்பீட்டை கணக் கிட வேண்டும் என உயர்மின் கோபுர எதிர்ப்பு விவசாயிகள் சங் கக் கூட்டியக்கம் கூறியுள்ளது. இது போன்ற கைது நடவ டிக்கை, பொய் வழக்குகளுக்கு உயர்மின் கோபுரங்களுக்கு எதி ராகப் போராடிவரும் பாதிக்கப் பட்ட உழவர்கள் ஒருபோதும் அஞ்சியது இல்லை, இது போன்ற பொய் வழக்குகளால் விவசாயி கள் கோரிக்கையை புறந்தள்ளி விட முடியாது என்றும் கூட்டியக் கம் உறுதிபடத் தெரிவித்துள்ளது. மேலும் சந்தை மதிப்பில் சட்டப் படி இழப்பீடு பெறும்வரை விவசா யிகளின் போராட்டம் தொடரும் என்றும் உயர்மின்கோபுர எதிர்ப்பு விவசாயிகள் கூட்டியக்கம் தெரி வித்துள்ளது. பவர் கிரிட் நிறுவனத்தின் தூண்டுதலால் பொய்வழக்கு பதிவு செய்து விவசாயியைக் கைது செய்துள்ள திருப்பூர் மாவட்ட காவல்துறையினருக்கு கூட்டி யக்கம் கடும் கண்டனம் தெரிவித் துள்ளது. அத்துடன் பொய் வழக்குப் பதிவு செய்து பாதிக்கப்பட்ட விவ சாயியை கைது செய்ததை கண் டித்து அருகாமை பகுதியிலுள்ள விவசாயிகள் உயர்மின்கோபுரத் திட்டப் பணிகளை தடுத்து மறியல் போராட்டம் மேற்கொண்டனர்.