tamilnadu

img

தூய்மை இந்தியா பெயரில் போலி வாக்குகள் சேகரிப்பு கோவை மாநகராட்சியின் ஏமாற்று வேலை

கோவை, ஜன.  25 – தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நகரம் தூய்மையாக இருப்பதாக போலி வாக்குகளை கோவை மாநகராட்சி சேகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத் தியுள்ளது.  நாடு முழுவதும் ஜன. 4ஆம் தேதி முதல் ஜன.31 ஆம் தேதி வரை தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் அனைத்து நகரங்களையும் தூய்மையின் அடிப்ப டையில் தரவரிசை கண்டறியவும், ஸ்வச் சர்வேஷன்-2020 இந்திய அரசாங்க த்தின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் மூலம் நடத்தப்ப டுகிறது. எனவே, கோவை மாநகராட்சி பொதுமக்கள் அனைவரும் கோவை மாநகரின் தூய்மைக்கான தங்களின் வாக்குகளை 1969 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாகவும், கைபே சியில் (Swachh Survekshan 2020 (APP) செயலி வாயிலாகவும், http://swachhs urvekshan2020.org/CitizenFeedback என்ற இணையதளம் மூலமாகவும் பதிவு செய்யலாம் என கோவை மாநகராட்சி ஆணையர் தெரிவித்திருந்தார்.  உண்மையில் நகரத்தின் தூய்மை குறித்து மக்களின் கருத்தையறிந்து அதற் கேற்ப பணிகளை வேகப்படுத்தவே அரசு நிர்வாகங்கள் இதுபோன்ற திட் டங்களை அறிமுகப்படுத்துகிறது என் பதே மக்களின் மனநிலையாக உள்ளது. ஆனால், இதற்கு நேர் மாறாக பல் வேறு அரசு சாரா அமைப்பு பெய ரில் ஆட்களை நியமித்து போலி வாக்கு களை சேகரிக்கும் முயற்சியில் கோவை மாநகராட்சி ஈடுபட்டு வருவதாக எழுந் துள்ள குற்றச்சாட்டு பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.  உதாரணமாக, கோவை மாநகராட் சிக்குட்பட்ட ராமநாதபுரம், கணேச புரம் பகுதிகளில் இளைஞர்கள் வீடு கள் மற்றும் அலுவலகத்திற்கு சென்று  சம்பந்தப்பட்டவர்களின் செல்போன் எண்ணை கேட்கின்றனர். இதனைப் பெற்ற பிறகு உங்களுக்கு ஒரு ஓடிபி எண் வரும் அதனை சொல்லுங்கள் என்று கேட்கின்றனர். அந்த ஓடிபி எண்ணை பெற்றவுடன் நன்றி நாங்கள் செல்கி றோம் என துண்டறிக்கை கொடுத்து விட்டு கிளம்புகின்றனர். இதேபோல் வீடுவீடாக சென்று இளைஞர்கள் மற்றவர்களின் செல்போண் எண்ணை கேட்பதும், ஓடிபி எண்ணை கேட்பது மாக செல்கின்றனர்.  இதுகுறித்து கணேசபுரம் பகுதியில் அலுவலகத்தில் பணியாற்றும் நெல்சன் பாபு என்பவர் கூறுகையில், எங்கள் அலு வலகத்திற்கு வந்த இளைஞர்கள் நாங் கள் கோவை மாநகராட்சியில் இருந்து வருகிறோம். உங்கள் செல்போன் எண்ணை சொல்லுங்கள் என்றனர். பிறகு ஓடிபி எண்னை தெரிந்து கொண்டு  நழுவினார்கள். பிறகு நீங்கள் யார் எதற்கு என்னுடைய எண்ணை கேட்டீர் கள். இது என்ன ஓடிபி என்று கேட்ட தற்கு, ஒன்னுமில்லை சார், கோவை மாநகராட்சி மிகவும் தூய்மையாக இருக் கிறது என்று நீங்கள் வாக்களிக்க வேண்டும். உங்களுக்கு சிரமாமாக இருக்கும் என்பதால் நாங்களே வாக்க ளித்துவிட்டோம் என்று கூறினர்.  இது எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நான் சேரன் மாநகரில் குடியிருக்கிறேன். அங்கிருந்து வருகிற வழியெல்லாம் குப்பைகள் தேங்கியும், சாக்கடை தெருவில் ஓடியும் அசுத்த மாக இருக்கிறது. கோவை ஜெம் மருத்து வமனை அருகில் பிரதான சாலையின் நடுவில் குப்பை தொட்டிகளை வைத் துள்ளனர். அந்த வழியாக வாகனத்தில் வரும்போது பல நேரங்களில் அந்த தொட்டியில் நிறைந்துள்ள குப்பைகள் வாகன ஓட்டிகளின் மீது வந்து விழும். நானே பல நேரம் இந்த நிலையை அனு பவித்திருக்கிறேன். என்னிடமே வந்து நகரம் சுத்தமாக இருக்கிறது என என்னு டைய பெயரில் வாக்குகளித்து சென்று விட்டனர். இப்படித்தான் நகரம் முழுவ தும் கோவை மாநகராட்சி போலியாக வாக்குகளை சேகரிக்கிறதோ என்கிற ஐயம் எழுகிறது என்றார்.   கோவை மாநகராட்சியில் ஆயிரக்க ணக்கான துப்புரவு தொழிலாளர்களின் பணியிடங்கள் காலியாக உள்ளது. மக் கள் தொகைக்கும் நகரத்தின் தூய்மை தொழிலாளர்கள் உள்ள எண்ணிக்கைக் கும் சம்பந்தமே இல்லாத நிலை உள்ளது. நகரம் தூய்மையாக இருக்க வேண்டும் என்கிற மாநகராட்சியின் எண்ணம் காரியத்தில் இருக்க வேண்டுமே தவிர, போலி வாக்குகளை சேகரித்து சிறந்த மதிப்பெண் பெறுவதில் இருக்க கூடாது என்பதே அனைவரது எதிர்பார்ப்பு. அ.ர.பாபு

;