tamilnadu

எதிர்பார்ப்புகள் வீணாணது- ஏமாற்றம் உறுதியானது 2020 பட்ஜெட் குறித்து தொழில்துறையினர் புலம்பல்

கோவை, பிப்.1–  எதிர்பார்ப்புகள் எல்லாம் வீணா கிப்போனது, மேல்பூச்சில் இனிப்பும் உள்ளே கசப்பையும் வைத்து முழுக்க ஏமாற்றத்தை அளிக்கும் பட்ஜெட் டாக உள்ளதாக கோவை தொழில்து றையினர் வேதனை தெரிவித்துள்ள னர்.  2020- 21 ஆம் ஆண்டிற்கான மத்திய நிதி நிலை அறிக்கையினை மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாரா மன் சனியன்று தாக்கல் செய்தார். முன்னதாக, தொழில் நகரான கோவை மாவட்டத்தில் மத்திய பட் ஜெட் குறித்த பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. குறிப்பாக, இந்த காலத் தில் ஜவுளி, சிறுகுறு தொழில்து றையினர் உள்ளிட்டோர் மத்திய நிதி யமைச்சர் மற்றும் பிற துறை அமைச் சர்களை தொடர்ந்து சந்தித்து தங்க ளது கோரிக்கைகளை முன்வைத்தி ருந்தனர். இதன்காரணமாக தொழில் துறையினர் மற்றும் தொழில் முனை வோர் தங்களது கோரிக்கைகள் பல வையும் ஏற்கப்படும் என்கிற நம்பிக் கையில் மிகப்பெரிய அளவில் எதிர் பார்த்து இருந்தனர். ஆனால் அவர்க ளுக்கு இந்த நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் தரும் நிதி நிலை அறிக்கை யாக அமைந்துள்ளதாக கருத்து தெரி வித்துள்ளனர்.  இதுகுறித்து கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பா ளர் சங்க (கோப்மா) தலைவர் மணி ராஜ் கூறுகையில், ரூ.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு, ஜி.எஸ்.டி மற்றும் வருமான வரி நடைமுறைக ளில் எளிமை, தொழில் முனைவோ ருக்கு உதவி மற்றும் ஆலோசனை வழங்க தனி அமைப்பு, தொழில் மற் றும் வர்த்தக திட்டத்திற்கு ரூ.27, 300 கோடி, மின்சாரம் மற்றும் புதுப் பிக்கதக்க எரிசக்திக்கு ரூ.2.2 ஆயிரம் கோடி, ரூ.7.5 லட்சம் வரை வருமான வரி 20 சதவிகிதத்திலிருந்து 10 சதவீத மாக குறைப்பு போன்ற அறிவிப்பு கள் வரவேற்கத்தக்கவை. அதேநேரம், இந்தியாவை பொருத்தவரை 90 சதவிகித விவசாய தொழில்கள் மோட்டார் பம்ப் செட் மூலமாக பாசன வசதி பெறுகிறது. விவசாயிகளுக்கு நிதியுதவி அளித்து சோலார் பம்ப் செட் அமைத்தாலும் கூட வெயில் காலங்களில் மட்டுமே நாள் ஒன்றிற்கு 5 முதல் 6 மணி நேரம் செயல்படும் வாய்ப்பு உள்ளது. சூரிய சக்தி போதுமான அளவு இல்லாத போது அதற்காக செய்த முதலீடு வீணாகும். மின்சாரம் மூலம் இயங்கு கின்ற பம்ப் செட்டிற்கு ஜி.எஸ்.டியில் முழு வரி விலக்கு அளித்தால் விவசா யிகளும், பம்ப்செட் உற்பத்தியாளர்க ளும் அதிகளவு பயனடைவர்.  மேலும், சிறு குறு நிறுவனங்க ளுக்கு ரூ.1.5 கோடி வரை கலால் வரி விலக்கு அளிக்கும் நடவடிக்கை எடுக் கப்படவில்லை. அரசின் பல்வேறு தவறான கொள்கைகள் மற்றும் நடவ டிக்கைகளால் சுயதொழில் புரிவோர் கடும் தொழில் நசிவை சந்தித்து வரு கின்றனர். ஆனால் அவர்களுக்கு உத வும் வகையில் எந்த அறிவிப்பும் பட் ஜெட்டில் இடம் பெறவில்லை. படித்த இளைஞர்களின் சுய வேலை வாய்ப்பை உருவாக்கும் அறிவிப்பு கள் எதுவுமில்லை. இதனால் வேலை யில்லா திண்டாட்டம் மேலும் அதி கரிக்கும். பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைக்கப்படவில்லை. கோவை மாவட்டத்திற்கு புதிய ரயில் சேவைகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறித்த அறிவிப்பு இல்லா தது ஏமாற்றமளிக்கிறது. பொதுவாக, இது மேல் இனிப்பு தடவிய உள்கசப்பு பட்ஜெட் என்றார்.
ஏமாற்றத்தில் முடிந்த எதிர்பார்ப்பு
தமிழ்நாடு கைத்தொழில் மற் றும் குறுந்தொழில் முனைவோர் சங்க (டேக்ட்) தலைவர் ஜேம்ஸ் கூறுகை யில், சிறு, குறு தொழில் முனைவோர் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைக ளுக்கு தீர்வாக இந்த பட்ஜெட் அமை யும் என்று எதிர்பார்த்திருந்தோம். ஆனால் தற்போது ஏமாற்றமே மிஞ்சி யுள்ளது. ஜி.எஸ்.டி அமலாக்கத்திற்கு பிறகு கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வரும் ஜாப் ஆர்டர் நிறு வனங்களுக்கு ஜி.எஸ்.டி விலக்கு அளிக்கப்படவில்லை. ஜி.எஸ்.டியில் அபராத தொகையாக வசூ லிக்கப்பட்ட பணம் திரும்ப கிடைக் கும் என்ற எதிர்பார்ப்பும் நிறைவேற வில்லை. முடங்கி கிடக்கும் சிறு, குறு நிறுவனங்களுக்கு உதவ வங்கி கட னுக்கான வட்டி 5 சதவிகிதமாக குறைப்பது, கோவை மாவட்டத்தில் ராணுவ தளவாட உற்பத்தி செய்யும் பொதுத்துறை நிறுவனத்திற்கான அறிவிப்பு, கோவை மெட்ரோ திட்ட அறிவிப்பு என்று நாங்கள் எதிர்பார்த்திருந்த எதுவும் அறிவிக் கப்படவில்லை. இந்த பட்ஜெட்டால் சிறு, குறு தொழில் முனைவோருக்கு ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது என்றார்
அடிப்படையில் மாற்றம் இல்லை
தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்ல சாமி கூறுகையில், பட்ஜெட்டில் விவசாயத்திற்கு சற்று கூடுதலாக நிதி ஒதுக்கியுள்ளனர். கடந்தாண்டு ரூ.1.3 லட்சம் கோடி ஒதுக்கப்படிருந்த நிலையில் தற்போது ரூ1.83 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாய கடன் ரூ.15 கோடியாக அதிகப்படுத்தப்பட்டுள்ளது. கிராமப் புற மேம்பாட்டிற்கு ரூ.1.23 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒதுக் கப்பட்ட நிதி கடந்தாண்டை காட்டி லும் கூடுதல் என்றாலும், அடிப்படை யாக மேற்கொள்ள வேண்டிய விசயங்களை மேற்கொள்ளவில்லை. விவசாயிகளின் வருவாயை இரட்டிப் பாக்க ஒரே வழி விவசாய கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத் துவது மட்டுமே. அதுகுறித்த எந்த அறிவிப்பும் இல்லை.  காற்று மாசுபடுதலை கட்டுப்ப டுத்த ரூ.4,400 கோடி ஒதுக்கப்பட் டுள்ளது. காற்று மாசிற்கு அடிப்படை யான காரணங்களை சரி செய்யா மல் நிதி ஒதுக்குவதில் பயன் இல்லை. மக்கள் தொகை பெருக்கம், வாகன பெருக்கம் போன்றவற்றை கட்டுப்ப டுத்தாமல் காற்றுமாசை எப்படி தடுக்க முடியும். 82 சதவிகிதம் அள விற்கு வெளிநாடுகளில் இருந்து பெட் ரோலிய பொருட்களை இறக்குமதி செய்து வருகிறோம்.  இதன்மூலம் ரூ.15 லட்சம் கோடி அளவிற்கு அந்நிய செலாவணி இழப்பு ஏற்படுகிறது. இதை குறைப்ப தற்கு அமெரிக்கா மற்றும் பிரேசிலை பின்பற்றி எத்தனாலை மாற்று எரி பொருளாக பயன்படுத்த எந்த திட்ட மும் அறிவிக்கப்படவில்லை. விவ சாயிகளின் வருமானத்தை இரட்டிப் பாக்குவதற்கான வழிவகைகளை செய்யாமல் அறிவிப்பு மட்டும் வெளி யிடுவது பயன் தராது. நாட்டின் சமையல் எண்ணெய் தேவையில் 70 சதவிகிதத்தை அரசு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து, அதற்கு மானியமும் அளித்து வருகிறது. இறக் குமதி செய்யும் பாமாயிலை ரேசன் கடைகளில் விற்கும் அரசு, உள்நாட்டு உற்பத்தி எண்ணெய்களான தேங் காய் எண்ணெய், கடலெண்ணைய், நல்லெண்ணைய்,கடுகு எண் ணெய்க்கு முக்கியத்துவம் தருவ தில்லை. எனவே,இந்த பட்ஜெட் டால் எந்த மாற்றமும் வரப்போவ தில்லை என்றார்.
மகிழ்ச்சியுமில்லை, ஏமாற்றமும் இல்லை
கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊர கத் தொழில் முனைவோர் சங்கம் (காட்மா) தலைவர் சிவக்குமார் கூறு கையில், ஏப்ரல் 2020 முதல் ஜி.எஸ்.டி  நடைமுறைகள் எளிமையாக்கப்ப டும். தனிநபர் வருமான வரி விலக்கிற் கான உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும், பட்டய கணக்காளர் மூலம் தணிக்கை செய்வதற்கான உச்ச வரம்பு ரூ.1 கோடியிலிருந்து ரூ. 5 கோடியாக உயர்த்தப்படும் என்ற அறிவிப்புகளை காட்மா சங்கம் வர வேற்கிறது. அதேசமயம், தொழில் முனைவோரின் நியாயமான கோரிக் கைகளான வங்கி கடனுக்கு வட்டி விகித குறைப்பு, தொழில் முனைவோ ரின் வங்கி கணக்கில் செய்யப்படும் பரிவர்த்தனைகளில் 40 சதவிகித கடன் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் சம்பந்தமாக எந்த வித அறிவிப்பு இல்லாதது வருத்தம் அளிக்கிறது. ஒரு சில அம்சங்கள் வர வேற்கும் வகையில் இருந்தாலும், இது குறுந்தொழில் முனைவோர்க்கு மகிழ்ச்சியோ ஏமாற்றமோ அளிக் காத பட்ஜெட் என்றார்.
ஜி.எஸ்.டி குறித்து எதுவுமே சொல்லப்படவில்லை
தொழில் வர்த்தக சபை கோவை கிளை தலைவர் லட்சுமிநாரயண சாமி கூறுகையில், இந்த பட்ஜெட் டில் புதிய தொழில்கள் துவங்க  சில சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளது. விவசாயத்திற்கு நிறைய திட்டங்கள் கொடுத்து இருக்கின்றனர். ஆனால், வருமான வரியில் எதிர்பார்த்த சில  சலுகைகள் கிடைக்க வில்லை. ஜி. எஸ்.டி குறித்து எதுவுமே சொல்லப் படவில்லை. சிறு, குறு தொழில் களை பொறுத்த வரை சில சாதகமான அம்சங்கள் மட்டுமே இருக்கின்றது. நிதி ஒதுக்கீட்டை பார்த்துதான் மற் றதை சொல்ல முடியும். கோவைக்கு என புதிய திட்டங்கள், ராணுவ வழி தடம் குறித்து எதுவும் இதில் சொல்லப் பட வில்லை. இருப்பினும், கடந்த பட் ஜெட்டுடன் ஒப்பிட்டால் இந்த பட் ஜெட் சிறப்பாக இருக்கின்றது. ஆட் டோமொபைல் துறை குறித்து இந்த பட்ஜெட்டில் எதுவும் பேசப்பட வில்லை. தொழில் துறைக்கான ரூ.27 ஆயிரத்து 300 கோடி ஒதுக்கீடு என் பது வழக்கமானதுதான் என்றார்.
பெரிதாக எதுவுமில்லை...
தென்னிந்திய பொறியியல் சங் கம் (சீமா) தலைவர் கிருஷ்ணகுமார் கூறுகையில், கார்ப்பரேட் நிறுவ னம் அல்லாதவர்களுக்கும் மத்திய அரசிடம் வரி சலுகை கேட்டு இருந்தோம். இந்த நிதி நிலை அறிக் கையில் அது கொடுக்காதது ஏமாற் றம் அளிக்கிறது. அதேபோல் 20 லட் சம் சோலார் மோட்டார் பம்ப் என்ற அறிவிப்பால், சிறு, குறு மோட்டார் பம்ப் உற்பத்தியாளர்களுக்கு பல னில்லை. பெரிய நிறுவனங்கள் மட் டுமே இந்த டெண்டரில் கலந்து கொள்ள முடியும். அனைத்து சிறு ,குறு மோட்டார் பம்ப் உற்பத்தியாளர்க ளும் பங்கேற்கும் வகையில் டென்ட ரில் மாற்றம் செய்தால் மட்டுமே இது பலன் அளிக்கும். நிதி அமைச்சர் தாக் கல் செய்த நிதி நிலை அறிக்கை யில் பெரிதாக எதுவுமில்லை. இது சராசரியான பட்ஜெட்தான். இந்த நிதிநிலை அறிக்கையில் மூத்த குடி மக்களுக்கு எந்த திட்டமும் அறிவிக் கப்படவில்லை என்றார். மொத்தத்தில் மத்திய அரசின் இந்த நிதி நிலை அறிக்கை தொழில் முனைவோர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் பெரும் ஏமாற்றத் தையே ஏற்படுத்தியுள்ளது.  (ந.நி)

;