நொய்யல் ஆற்றினை ரூ.230 கோடி மதிப்பீட்டில் விரிவாக்குதல், புனரமைத்தல் மற்றும் நவீனமயமாக்கல் பணியினை வெள்ளியன்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார். இதையொட்டி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி, பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் எஸ்.காசிலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.