tamilnadu

கோவை மற்றும் ஈரோடு முக்கிய செய்திகள்

தொண்டை அடைப்பான் நோய் கோவையில் அதிகரிப்பு தடுப்பூசி போடுவதில் சிக்கல்

கோவை, ஆக. 8 -  கோவை நகரிலும் குழந்தைக ளுக்கு தொண்டை அடைப்பான் நோய் வேகமாக பரவி வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி போட பெற்றோர் மற்றும் தனி யார் பள்ளிகள் போதிய ஒத்து ழைப்பு அளிக்காததால் தடுப்பூசி போடுவதில் சிக்கல் ஏற்பட்டுள் ளது.  தமிழகத்தில் கடந்த 40 ஆண் டுகளுக்கு முன்பு தொண்டை அடைப்பான் நோய் பெரும் அச் சுறுத்தலை ஏற்படுத்தி வந்தது. தொண்டை அடைப்பான் நோய் ‘‘பாக்டீரியம் டிப்தீரியா’’ என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இந்நோய் குழந்தைகளை அதி களவில் பாதிக்கிறது. இந்த  நோய் ஏற்பட்டவுடன் தொண்டை யில் உருவாகும் சவ்வு காரணமாக உணவை சாப்பிடவும், விழுங்க வும் முடியாத நிலை ஏற்படும். பின்னர், மூச்சுத்திணறல் ஏற் பட்டு உயிரிழப்பு ஏற்படும். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் ஈரோடு மாவட்டம் தாள வடியை சேர்ந்த 10 வயது சிறுவன் தொண்டை அடைப்பான் காரண மாக உயிரிழந்தான். இதனை தொடர்ந்து, ஈரோடு சத்தியமங்க லம் கடம்பூர் மலைப்பகுதி கிரா மங்களில் தொண்டை அடைப் பான் நோய் வேகமாக பரவியது. இந்த நோயின் தாக்கம் தமிழகத் தின் பல்வேறு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க பள்ளி குழந்தைகள், கர்ப்பிணி களுக்கு தடுப்பூசி போடும் பணி கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவை நகர பகுதியில் தொண்டை அடைப் பான் நோய் வேகமாக பரவி வரு கிறது. குனியமுத்தூர், சுங்கம், உக்கடம் சுற்றுவட்டார பகுதி களில் பாதிப்பை ஏற்படுத்தி யுள்ளது. குழந்தைகளுக்கு மட் டுமே ஏற்படும் என கூறப்பட்ட தொண்டை அடைப்பான் நோய் பெரியவர்களையும் தாக்கி வருகி றது. கோவை அரசு மருத்துவ மனையில் உக்கடம் காந்திநகர் பகுதியை சேர்ந்த 28 வயது வாலி பர், சுங்கம் பகுதியை சேர்ந்த 19 வயது இளைஞர் உள்பட 35க்கும் மேற்பட்டவர்கள் தொண்டை அடைப்பான் பாதிப்பின் காரண மாக சிகிச்சைக்காக சேர்க்கப்பட் டுள்ளனர். மேலும், 30க்கும் மேற்பட்ட வர்கள் கண்காணிப்பில் வைக் கப்பட்டுள்ளனர். நோய் பாதிப்பை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பூஸ்டர் தடுப் பூசி மற்றும் 7 முதல் 17 வயதிக் குட்பட்ட அனைத்து குழந்தைக ளுக்கும் டிடி என்ற தடுப்பூசி போடும் பணி சுகாதாரத்துறை மூலம் பள்ளிகளில் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. இதில், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தடுப்பூசி போட பெற்றோர் தரப்பில் எதிர்ப்பு  தெரிவிக்கின்றனர். இதனால், பள்ளி நிர்வாகம் சுகாதாரத்துறை யினர் தடுப்பூசி போட அனு மதிப்பதில்லை. கல்வித்துறையில் இருந்து தடுப்பூசி போடுவது தொடர் பாக எந்தவித தகவலும் தெரி விக்கவில்லை என தனியார் பள்ளி நிர்வாகத்தினர் மருத்துவர்க ளிடம் தெரிவித்து வருகின்றனர். இதனால், கோவை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியில் சிக்கல் ஏற் பட்டுள்ளது. பள்ளிகளில் தடுப் பூசி போட பெற்றோர், மற்றும் பள்ளி நிர்வாகம் மறுப்பு தெரி வித்து வருவது நோயின் தாக் கத்தை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்த னர். இதுகுறித்து தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி கூறுகையில், தடுப்பூசி போட்டால் தான் நோய் பாதிப்பை கட்டுப்படுத்த முடியும். சுகாதாரத்துறையினருக்கு பெற் றோர் ஒத்துழைப்பு அளிக்க  வேண்டும். பள்ளி மாணவர்க ளுக்கு தடுப்பூசி போடுவது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அறிவுறுத் தப்படும். அவரின் மூலம் அனைத்து பள்ளி மாணவர்களுக் கும் தடுப்பூசி போடப்படும் என்றார்.

வேலைவாய்ப்பு முகாம் ஒத்திவைப்பு

ஈரோடு,ஆக.8- ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித் துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுத் திட்டம், ஈரோடு  மற்றும் கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியோர் இணைத்து ஆக.10 ஆம் தேதியன்று கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி கரட்டடிபாளை யத்தில் நடத்தவிருந்த மாவட்ட அளவி லான வேலைவாய்ப்பு முகாம் நிர்வாக  காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள் ளது என மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.

மின்தடை 

ஈரோடு, ஆக.8- பெருந்துறை சிப்காட் துணை மின்  நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி ஆக.9 (வெள்ளிக்கிழமை) நடை பெறவுள்ளதால் பெருந்துறை கோட்டத் தைச் சார்ந்த சிப்காட் வளாகம் தெற்கு பகுதி மட்டும், கம்புளியம்பட்டி, சரளை, வரப்பாளையம், புளியம்பாளை யம், காசிபில்லாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக் காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.