tamilnadu

img

அனுமதியின்றி சென்னையில் இருந்து ஊழியர்கள் வரவழைப்பு கோவையில் பிரபல நகைக்கடைக்கு சீல்

கோவை, ஜூன் 20–  கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னையில் இருந்து அனுமதியின்றி ஊழியர்களை கோவைக்கு அழைத்து வந்த ஜிஆர்டி நகைக்கடைக்கு காவல் துறையினர் அதிரடியாக சீல் வைத்தனர்.  தமிழகம் முழுவதும் பல்வேறு கிளைகளை கொண் டுள்ள ஜிஆர்டி நகைக்கடை.  காந்திபுரம் கிராஸ்கட் சாலையிலும் ஒரு கிளை கொண்டுள்ளது. கொரோனா  வைரஸ் தொற்று காரணமாக  ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தற்போது சிறிது சிறிதாக தளர்வு கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே சென் னையில் கொரோனா தொற்று அதிகரித்து  வருகிற நிலையில் தற்போது சென்னையில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை யில் இருந்து யாரும் வெளியேற அனுமதி மறுக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் ஜிஆர்டி நிறுவனம் எவ்வித அனுமதியும் இன்றி 30க்கும் மேற் பட்ட ஊழியர்களை கோவையில் உள்ள கடைக்கு அழைத்து வந்து பணியில் அமர்த்தியுள் ளது.

இதுதொடர்பான புகாரையடுத்து கோவை மாந கராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ஜிஆர்டி நகைக்கடையில் அதிரடி சோதனை மேற் கொண்டனர். சென்னையில் முழு ஊரடங்கு காரணமாக அங்கு  பணியில் அமர்த்தப்பட்ட ஊழியர்களை கோவைக்கு அழைத்து வந்து நகை விற்பனையில் ஈடுபட்டது உறுதிப்படுத்தப்பட்டது. இதனை யடுத்து நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களையும் வெளியேற்றிவிட்டு மூன்று அடுக்கு மாடிகளுக்கும் கிருமி நாசினிகள் அடிக்கப் பட்டது. மேலும்  30 பேரையும் மருத்துவர் குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர்.

ஊரடங்கு சட் டத்தை மீறியதாக கடைக்கு மாநகராட்சி அதிகாரி கள் அதிரடியாக சீல்வைத்தனர். பிரபல நகைக்கடை நிறுவனம் அனுமதியின்றி சென்னையில் இருந்து ஊழியர்களை அழைத்து வந்த சம்பவம் கோவை மாநகர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத் தியுள்ளது.

;